பொடாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வைகோ வழக்கு
சென்னை:
பொடா சட்டத்தை எதிர்த்து அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளரான வைகோஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நான் பேசிய போது பொடா சட்டம் தொடர்பாக நான் நாடாளுமன்றத்தில்நடந்த விவாதம் குறித்து விளக்கம் அளித்தேன்.
ஆனால் நான் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி போலீசார் கடந்த ஜூலை 11ம் தேதிஎன்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொடா சட்டத்தின் 21(1) மற்றும் 21(3) ஆகிய பிரிவுகள் இந்திய அரசியல் சாசனப் பிரிவுகள் 19(1) மற்றும்19(1)சி ஆகிய பிரிவுகளுக்கு முரணானதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசுவது பொடா சட்டப்படி தீவிரவாத இயக்கத்துக்குஆதரவளிப்பதாகக் கருதப்படுமா, தனிப்பட்ட உரிமையைப் பறிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளதாஆகிய கேள்விகளும் எழுந்துள்ளன.
எனவே இந்திய அரசியல் சாசனத்தின் 19வது பிரிவு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான பேச்சு சுதந்திரத்தைபொடா சட்டத்தின் 21வது பிரிவு கட்டுப்படுத்துவதாகத் தெரிகிறது.
எனவே இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான இந்தச் சட்டப் பிரிவு, பேச்சு சுதந்திரத்தைப் பறிப்பதோடுமட்டுமில்லாமல் அமைதியான முறையில் கூட்டம் நடத்துவதையும் தடை செய்கிறது.
ஒரு இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது வன்முறையைத் தூண்டுவதாகாது. அச்சமின்றிப் பேசும் சுதந்திரம்தான் ஜனநாயகத்துக்கு அடிப்படை.
எனவே பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் பொடா சட்டத்தின் 21வது பிரிவு செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று அம்மனுவில் வைகோ கூறியுள்ளார்.
பொடா சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது நாடாளுமன்றத்தில் அதை ஆதரித்து மிகவும் தீவிரமாகப் பேசியவர்வைகோ என்பது குறிப்பிடத்தக்கது.
-->


