பயங்கர ரவுடி சுட்டுக் கொலை
சென்னை:
சென்னை ராயபுரம் பகுதியில் நள்ளிரவு பயங்கர ரவுடி ஒருவன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ராயபுரம் பகுதியில் போலீஸார் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரபல ரவுடிஒருவன் மோட்டார் சைக்கிளில் அந்தப் பக்கம் வருவதாக சப் இன்ஸ்பெக்டர் லட்சுமணனுக்கு தகவல் வந்தது.இதையடுத்து போலீஸார் உஷாராக இருந்தனர்.
மோட்டார் சைக்கிளில் சுறா என்ற சுரேஷ் என்ற அந்த ரவுடி வந்தான். அவனை வழிமறித்த போலீஸார் நிற்குமாறுகூறினார். ஆனால் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற சுரேஷ் போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டைவீசினான். அதிர்ஷ்டவசமாக அது வெடிக்கவில்லை.
இதையடுத்து லட்சுமணன் தலைமையில் போலீஸார் சுரேஷை விரட்டிச் சென்றனர். ராயபுரம் பாலம் அருகேவந்ததும், போலீஸாரை கத்தியால் வெட்ட முயன்றுள்ளான் சுரேஷ்.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், சுரேஷை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டுக் காயம்பாய்ந்து சுரேஷ் இறந்தான்.
இந்த மோதலில் லட்சுமணனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட சுறா என்ற சுரேஷ் பயங்கர ரவுடி ஆவான். இவன் மீது 11க்கும் மேற்பட்ட கொலை, கொலைமுயற்சி,கொள்ளை வழக்குகள் உள்ளன.
கடந்த 1995ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு 7 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு 4நாட்களுக்கு முன்புதான் விடுதலையாகி இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-->


