சென்னையை கலக்கிய தலையில்லா முண்டம்: கொலையாளி உ.பியில் கைது
சென்னை:
சென்னையில் உடல் வேறு, தலை வேறாக ஒருவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக உத்தரப்பிரதேசத்தைச்சேர்ந்த நாசர் உசேன் என்பவரை சென்னை போலீஸார் கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ரியாஸ் கான். இவருக்கும், உ.பி. மாநிலம் மொராதாபாத்தை சேர்ந்த நாசர்உசேனுக்கும் இடையே பழைய பேப்பர் வாங்கும்,விற்கும் தொழிலில் போட்டி ஏற்பட்டது.
இதில் ரியாஸ் மீது கோபம் கொண்ட நாசர் உசேன், கடந்த மாதம் 17ம் தேதி ரியாஸ் கானை சென்னைக்குஅழைத்து வந்தார். பின்னர் ஆலந்தூரில் வைத்து அவரை கொலை செய்தார்.
இதையடுத்து ரியாஸ் கானின் தலையை ஆலந்தூரிலும், உடலை சைதாப்பேட்டை பகுதியிலும் போட்டு விட்டுத்தலைமறைவாகி விட்டார்.
சென்னை மாநகரையே பரபரப்பில் ஆழ்த்திய இந்த கொலை தொடர்பாக போலீஸார் தீவிரமாக விசாரித்துவந்தனர். இதில் கொலையாளி குறித்து துப்பு துலங்கியது.
இதையடுத்து உ.பியில் தலைமறைவாகியிருந்த கொலையாளி நாசர் உசைனை அழைத்து வர தமிழகப் போலீஸார்அங்கு விரைந்தனர்.
உ.பி. போலீஸாரின் உதவியுடன் நாசர் உசேன் கைது செய்யப்பட்டு இன்று காலை ரயில் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டார்.
-->


