For Daily Alerts
Just In
வைகோ கைதைக் கண்டித்து இன்று சென்னையில் பேரணி
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைக் கைது செய்ததைக் கண்டித்து அக்கட்சியின்சார்பில் சென்னையில் இன்று கண்டனப் பேரணி நடக்கிறது.
இன்று காலை கிண்டி கத்திப்பாரா சந்திப்பிலிருந்து கிளம்பும் பேரணி, மாலை பூந்தமல்லியில் நிறைவடைகிறது.
பேரணியின் முடிவில் பூந்தமல்லி செட்டித் தெருவில் கண்டனப் பொதுக்கூட்டம் ஒன்றும் நடக்கிறது.
இதில் மதிமுக அவைத் தலைவர் எல். கணேசன், பொருளாளர் கண்ணப்பன், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சிராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
-->


