For Daily Alerts
Just In
பழ. நெடுமாறனின் சிறைவாசம் நீட்டிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனின், பொதுச் செயலாளர்சுப.வீரபாண்டியன் ஆகியோரின் காவல் டிசம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் கைதான தாயப்பனின் காவலும் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பாவாணனின் காவல் 10ம் தேதிநீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களின் காவலை நீட்டித்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியதாக இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-->


