For Daily Alerts
Just In
கிருஷ்ணா பிடிவாதத்தால் தமிழகத்துக்கு ரூ.3,000 கோடி நஷ்டம்: பொன்னையன்
நாமக்கல்:
காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவின் பிடிவாதப் போக்கு காரணமாக தமிழகத்திற்கு ரூ.3,000கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக நிதி அமைச்சர் பொன்னையன் கூறினார்.
நாமக்கல்லில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விடவே மாட்டோம் என்று கிருஷ்ணா தேவையில்லாமல் வறட்டுப்பிடிவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் காவிரி டெல்டா பகுதிகளில் நடைபெற்றிருக்க வேண்டிய குறுவை சாகுபடி முற்றிலுமாக அடிபட்டுப்போனது.
இதனால் தமிழகத்திற்கு ரூ.3,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப் படி தற்போது திறந்துவிட்டுள்ள நீரை ஆரம்பத்திலேயே கர்நாடக அரசு திறந்துவிட்டிருந்தால் இந்த அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்காது என்றார் பொன்னையன்.
-->


