சாத்தான்குளம் இடைத் தேர்தல்: யாருடன் கூட்டணி?- பா.ஜ.க. விளக்கம்
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தல் உள்பட எதிர்வரும் தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதுகுறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல. கணேசன் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
எங்களைப் பொறுத்தவரை திமுகவுடன் எந்த மோதலும் இல்லை. பா.ஜ.க.வுடன் தமிழகத்தில் கூட்டணி இல்லைஎன்று அவர்களாகவேதான் அறிவித்தனர். ஆனால் தேசிய அளவில் இரு கட்சிகளுக்கும் இடையே நல்லுறவுநீடிக்கிறது.
வருகிற தேர்தல்களில் கூட்டணி உண்டா, இல்லையா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தேர்தல்கூட்டணி தொடர்பாக தேர்தல் நெருங்கும்போது தான் உறுதியாகத் தெரிய வரும்.
அதிகமுவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை. சில விஷயங்களில் இரு கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான எண்ணம்உள்ளதை மறுக்கவில்லை. ஆனால் அதற்காக இரு கட்சிகளும் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்றார் கணேசன்.
-->


