• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேச்சுவார்த்தை தோற்றால் மீண்டும் தனி ஈழம் கோருவோம்: பிரபாகரன்

By Staff
|

கொழும்பு:

தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்படாவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவது தவிர வேறுவழியில்லை என விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.

இலங்கை இனப் போரில் உயிரிழந்த 17,000க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளை நினைவு கூறும் வகையில் நேற்று மாவீரர்தின உரையாற்றினார் பிரபாகரன். இதனை தனியார் தமிழ் டிவி, ரேடியோக்களும், புலிகளின் வாய்ஸ் ஆப் டைகர் ரேடியோவும்,இலங்கை அரசின் ரூபவாகினி தொலைக் காட்சியும் ஒளி-ஒலிபரப்பின.

தனது 19 நிமிட உரையில் பிரபாகரன் கூறியதாவது:

எங்களது விடுதலைப் போராட்டம் புதிய கட்டத்தை எட்டிவிட்டது. ஆயுத போராட்டத்தை விட்டுவிட்டு அமைதிப்பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறோம். முதலில் போர் நிறுத்தத்தை நாங்கள் தான் அறிவித்தோம். 9 மாதங்களாக நாட்டில்அமைதி நிலவச் செய்திருக்கிறோம்.

தனி ஈழ கோரிக்கையை கைவிடும் அதே நேரத்தில் தமிழர் பகுதிகளுக்கு தன்னாட்சி வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாகஇருக்கிறோம். தமிழர்களை தமிழர்களே ஆளும் வகையில் கிடைக்கும் எந்த அரசியல் தீர்வையும் ஏற்கத் தயாராக இருக்கிறோம்.

ஆனால், எங்கள் மக்களின் சுய ஆட்சி உரிமை மறுக்கப்பட்டால் எங்களுக்கு மீண்டும் ஆயுதம் தூக்கி போராடுவது தவிர வேறுவழியில்லை. அப்படிப்பட்ட நிலையில் மீண்டும் தனி நாடு தான் கோருவோம்.

ஐக்கிய நாட்டு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது போல சுயாட்சி தான் எங்களது இந்த நெடிய போராட்டத்தின் நோக்கம்.திம்புவில் நாங்கள் எடுத்த கொள்கை முடிவுகள் தான் எங்களது அரசியல் போராட்டத்தின் அடிப்படை.

இப்போது நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் எங்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளன. சிங்கள வெறியர்கள் எங்களைஅமைதியின் எதிரிகள் என்று வர்ணித்து வரும் நிலையில் அதை அந்த தவறான கருத்தை முறியடிக்க மிக நேர்மையாக அமைதிமுயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

இலங்கை பாதுகாப்புப் படைகளின் சில பிரிவினரும், அமைதியை விரும்பாத சில அமைப்புகளும் தொடர்ந்து எங்களைசீண்டிவிட்டு வருகின்றன. பல அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்திருந்தாலும் மிகவும் கட்டுப்பாட்டுடனும் ஒழுக்கத்துடனும்எங்களை நாங்கள் கட்டுக்குள் வைத்து அமைதிக்காக விட்டுக் கொடுத்து இயங்கி வருகிறோம்.

அமைதிகாக பல முறை பேச்சு நடத்தியிருக்கிறோம். திம்பு, டெல்லி, கொழும்பு, யாழ்பாணம் என பேச்சுக்கள் நடத்தினோம்.கடந்த காலங்களில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடியக் காரணம் முந்தைய அரசுகளின் தவறான கொள்கைகளும்அரசியலும் தான். ஆனால், இப்போதைய இலங்கை அரசு உண்மையாகவும் தைரியமாகவும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணமுயற்சிக்கிறது. இது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் நார்வே நாட்டின் மிகத் திறமையான அமைதி முயற்சிகளும் இதற்குக் காரணம்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நேர்மையான பேச்சுவார்த்தைகளை கையாள்வதோடு, படிப்படியாக, முறையாக, பலமாக,பரஸ்பர நம்பிக்கையுடன் அமைதி முயற்சிகளை வழி நடத்தி வருகிறார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற வேண்டும். ஆனால், சர்வதேச அளவில் ஆதரவைப் பெற்றுவிட்ட இந்தப்பேச்சுவார்த்தைகளை சிங்கள் வெறி அமைப்புகள் தங்களது குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக குலைக்க முயன்றால் மீண்டும்ஆயுதம் தூக்கி போராடுவதைத் தவிர தமிழர்களுக்கு வேறு வழியே இருக்காது. தனி நாடும், சுதந்திரமும் தான் எங்களின்நோக்கமாகிவிடும்.

இனப் பாகுபாடும், இனரீதியிலான துன்புறுத்தல்களும் தான் ஆயுதப் போராட்டங்கள் ஏற்படக் காரணம். இந்த இனககொலைகாரர்களை, இன வெறியர்களை சிஙகள மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

இந்த இன வெறியர்களை ஒதுக்கினால் தான் நாட்டில் நிரந்தர மைதியும், இன ஒற்றுமையும், பொருளாதார மேம்பாடும்உருவாகும்.

அதே போல தமிழர்களை தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளும் உரிமையை சிங்களர்கள் எதிர்க்கக் கூடாது. தமிழர்கள் தங்கள்சுய மரியாதையுடனும், தங்கள் மொழி, கலாச்சாரம், பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளவும் உரிமை உண்டு. இதுதமிழர்களின் அடிப்படை உரிமை.

தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ முடியுமா அல்லது தமிழர்கள் தனி நாடு கோர வேண்டிய நிலை ஏற்படுமா என்பதுஇலங்கை அரசியல் கட்சிகளின் கைகளில் தான் உள்ளது.

தமிழர் பகுதிகள் இன்று சீரழிந்து போய் கிடக்கின்றன. தமிழர் நகரங்களும் கிராமங்களும் அழிந்துபோய்விட்டன. தமிழர்களின்பொருளாதார, சமூக, அரசியல் அடையாளங்களும் சிதைந்து போயுள்ளன. வீடுகள், பள்ளிகள், கோவில்களும் கூட இடிந்துதரைமட்டமாகிவிட்டன.

பல நூற்றாண்டுகளாய் இந்த நாட்டில் நிலவி வந்த தமிழர் நாகரீக அடையாளங்கள் இன்று இல்லை. இதை மீணடும் கட்ட எமதுமக்களால் நிச்சயம் முடியாது. இது ஒரு மிகப் பெரிய மனித குல பிரச்சனை. தமிழர் பகுதியை சீரமைக்க சர்வதேச சமுதாயம் தான்உதவ முடியும். தமிழ் தேசத்தை மீண்டும் கட்ட சர்வதேச சமுதாயம் முன் வந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.

ஆனாலும் பாதுகாப்புப் பகுதிகள் என்ற பெயரில் தமிழர்களின் வீடுகளையும் கோவில்களையும் சிங்கள் ராணுவம் இன்றும்ஆக்கிரமித்து தான் வைத்திருக்கிறது. யாழ்பாணத்தில் மட்டும் 40,000 படையினர் உள்ளனர். இந்த ராணுவ ஆக்கிரமிப்பால்தமிழர்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரான யாழ்பாணம் இன்று திறந்தவெளி சிறைச்சாலை ஆகிவிட்டது. இந்தப் பிரச்சனையைமுழுமையாகத் தீர்க்காவிட்டால் அமைதி பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தடைபடும். எனவே, இந்த விவகாரத்தை உடனே அரசுதீர்க்க வேண்டும்.

இவ்வாறு பிரபாகரன் தனது உரையில் தெரிவித்தார்.

தனது போர் சீருடையில் பிரபாகரன் இந்த உரையை தமிழில் ஆற்றினார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X