ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்
சென்னை:
சோதனையிடப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர்கள் வீடுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து லஞ்சஒழிப்பு போலீசார் விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
அன்பழகன்:
முன்னாள் கல்வி அமைச்சரான அன்பழகன் வீட்டில் நடந்த சோதனைகளின் அடிப்படையில் பல முறைகேடுகள்நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
"காவிரி ப்ரமோட்டார்ஸ்" என்ற கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியைத் தன் மகன் பெயரில் அவர் நடத்தி வருவது தெரியவந்துள்ளது. அவருடைய மகனுக்கு இந்தக் கம்பெனியை நடத்துவதற்கான போதுமான வருமானம் கிடையாது.
ஒரு மாணவிக்கு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இட ஒதுக்கீடு செய்வதற்காக அந்த மாணவியிடம் லஞ்சம் கேட்டதுதொடர்பாக அன்பழகனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முன்னாள் கல்வி இயக்குநர் கண்ணனின் வீட்டில் நடைபெற்ற சோதனையில், சென்னையிலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் இவர் ஏராளமான சொத்துக்களைக் குவித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
பெரியசாமி:
பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஏராளமானசொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்.
தன் பெயரில் மட்டுமில்லாமல் தன் மனைவி மற்றும் சகோதரர்களின் பெயர்களிலும் சொத்துக்களைவாங்கியுள்ளார்.
தன் சொந்த ஊரான வத்தலக்குண்டில் ஒரு வீட்டு மனை, மூன்று கார்கள், மோட்டார் பம்ப் செட்டுகள், ஒரு டிராக்டர்ஆகியவற்றை வாங்கிக் குவித்துள்ளார் பெரியசாமி.
விவசாய நிலங்களை வளப்படுத்தவும், விவசாய கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், மகளின் திருமணத்தைநடத்தவும், குழந்தைகளின் படிப்பிற்காகவும் பெரியசாமி ஏராளமாகச் செலவு செய்துள்ளார்.
அவருடைய உறவினர்களின் பெயர்களிலும் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் குறித்த ஆவணங்கள்கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சொத்துக்களுக்கும் பெரியசாமிக்கும் தொடர்பு உள்ளதாகவும் தெரிகிறது.
நேரு:
உணவுத் துறை அமைச்சராக இருந்த நேருவின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளிலும் ஏராளமானஆவணங்கள் சிக்கியுள்ளன.
இது தொடர்பாக நேரு, அவருடைய மனைவி சாந்தா, சகோதரர்கள் ராமஜெயம், ரவிச்சந்திரன், மணிவண்ணன்மற்றும் அவர்களின் மனைவிகள் ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேருவின் தந்தை நாராயணசாமி ரெட்டியாருக்கு திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கணக்கிளியநல்லூரில்சிறிது நிலம் மட்டுமே இருந்தது. அவரும் அரியலூரில் மிளகாய் வியாபாரம் தான் செய்து வந்தார்.
நேருவும் கடந்த 1989ல் அமைச்சராவதற்கு முன் மிளகாய் வியாபாரம் தான் செய்து வந்தார். அதுவும் மிகச் சிறியஅளவிலேயே நடத்தி வந்தார். அவருடைய சகோதரர்கள் சிறு பால் வியாபாரிகளாக இருந்தனர்.
ஆனால் அமைச்சரான பின்னர் மளமளவென்று சொத்துக்களைக் குவிக்க ஆரம்பித்தார் நேரு. திருச்சியில் ரூ.50லட்சம் மதிப்புள்ள நவீன பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். கணக்கிளியநல்லூரில் உள்ள பூர்வீக வீட்டை ரூ.10லட்சம் செலவில் புதுப்பித்துள்ளார்.
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களையும் வாங்கிக்குவித்துள்ளார் நேரு. சென்னை அருகே உள்ள உத்தண்டியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு பிளாட்டையும்அவர் வாங்கியுள்ளார்.
மேலும் மூன்று பொக்லைன் இயந்திரங்கள், மூன்று பஸ்கள், ராமஜெயத்தின் பெயரில் தனியார் கம்பெனியில்முதலீடு, ராமஜெயத்தின் மைத்துனர் பெயரில் மூன்று கார்கள், ஒரு ஜீப், மணிவண்ணன் பெயரில் விஸாநெசவாலையில் முதலீடு, பெட்ரோல் பங்க்கில் முதலீடு, கட்டுமானக் கம்பெனியில் முதலீடு ஆகியவற்றுக்கானஆவணங்கள் கிடைத்துள்ளன. இவற்றின் மதிப்பு பலப் பல கோடியாகும்.
மேலும் நேருவின் முதல் மகள் டாக்டருக்குப் படிப்பதற்கும், மகன் எஞ்சினியரிங் படிப்பதற்கும் பணத்தை வாரிஇறைத்துள்ளார் நேரு.
இவற்றைத் தவிர ஏராளமான பினாமி பெயர்களிலும் ஜெர்மனி, இத்தாலி போன்ற வெளிநாடுகளிலும்சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார் நேரு.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-->


