For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜன்னல் கம்பிகளை வளைத்து தப்பிய 3 சிறைப் பறவைகள்
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி சிறையில் இருந்து 3 கைதிகள் தப்பியோடிவிட்டனர்.
ஜன்னல் கம்பிகளை வளைத்து உடைத்துவிட்டு இவர்கள் தப்பியுள்ளனர். இந்த துணைச் சிறையில் ரவுடித்தனம் செய்தது, திருட்டுஆகிய குற்றங்களுக்காக அஷ்ரப், அபு, காஜா ஆகியோர் அடைக்கப்பட்டிந்தனர்.
இன்று காலை வழக்கம்போல் சிறையில் கைதிகளின் ரோல்கால் நடத்தியபோது இந்த மூன்று பேரையும் காணவில்லை.
இதையடுத்து சிறை முழுவதும் நடத்தப்பட்ட சோதனையின் ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்த ஜன்னல் கம்பிகள்வளைக்கப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் வழியாக இந்த மூவரும் தப்பியுள்ளனர்.
நேற்றிரவு இவர்கள் தப்பினர் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களை மீண்டும் பிடிக்க தனப் படைஅமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தப்பும் அளவுக்கு பணியில் அலட்சியமாக இருந்த சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை வரும் என்று தெரிகிறது.
-->


