For Daily Alerts
Just In
முரசொலி மாறன் தேறுகிறார்: கலாநிதி தகவல்
சென்னை:
அமெரிக்காவில் ஹூஸ்டன் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல் நிலைநன்றாக தேறி வருவதாக அவரது மகனும் சன் டிவியின் அதிபருமான கலாநிதி மாறன் தெரிவிததார்.
கடந்த 14ம் தேதி முதல் ஹூஸ்டனின் மெதோடிஸ்ட் மருத்துவமனையில் மாறன் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னைஅப்பல்லோவில் இருந்து தனி விமானம் மூலம் அவர் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார்.
கலாநிதியும் அவரது மனைவியும் ஹூஸ்டன் சென்றுவிட்டு நேற்றிரவு சென்னை திரும்பினர்.
இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் பல உறுப்புகளுக்கும் மாறனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்பல்லோவில் இருதய வால்வு மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் அதில் பூஞ்சைத் தாக்குதல் ஏற்பட்டதால்மாறனின் உடலின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
-->
Story first published: Saturday, November 30, 2002, 5:30 [IST]