காட்பாடியில் வெடி விபத்து: பொறியாளரின் கண் சிதைந்தது
வேலூர்:
காட்பாடியில் உள்ள தமிழக அரசின் வெடிபொருள் நிறுவனத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கரமானவெடிவிபத்தில் தலைமைப் பொறியாளர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் ஒருவருடைய கண்சிதைந்தது. இன்னொருவரின் கை துண்டிக்கப்பட்டது.
காட்பாடியில் தமிழக அரசுக்குச் சொந்தமான வெடிபொருள் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த 2001ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பயங்கர வெடிவிபத்தில் 22 பேர் பலியாயினர்.
அதேபோல இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கு நடந்த ஒரு வெடி விபத்திலும் பலர் காயமடைந்தனர். இந்தநிலையில் இன்று நடந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இன்று காலை இந்நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் ஊழியர் ராஜகோபால் ஆகியோர்டெட்டனேட்டர் பிரிவில் உள்ள ஒரு பெட்டியை நகர்த்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பெட்டியில் இருந்த டெட்டனேட்டர் குண்டுகள் பயங்கரமாக வெடித்தன.
இதில் சந்திரசேகரின் ஒரு கண் சிதறியது. மேலும் அவருடைய ஒரு கையும் துண்டாகியது. ராஜகோபாலுக்கும்இவ்விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இருவரும் உடனடியாக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள்இருவருமே உயிருக்குப் போராடி வருகின்றனர்.
-->


