For Daily Alerts
Just In
பல கோடி ரூபாய் மதிப்பு பஞ்ச லோக நடராஜர் சிலை கண்டுபிடிப்பு
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் உத்தரன்கோட்டை என்ற இடத்தில் அரிய வகை பஞ்ச லோக நடராஜர் சிலைகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உத்தரன்கோட்டை என்ற இடத்தில் உள்ள மங்களசாமி கோவில் வளாகத்தைத் தோண்டியபோது இந்த நடராஜர்சிலை கிடைத்தது.
மிகவும் அழகாக காட்சியளிக்கும் இந்த சிலையின் உயரம் 3.5 அடி ஆகும். பாண்டிய மன்னர்கள் காலத்தில் இதுதயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
சுமார் 15 கிலோ எடை கொண்ட இந்த நடராஜர் சிலை முழுக்க முழுக்க பஞ்ச லோகத்தாலேயே ஆனது.
சிலையின் மதிப்பைக் கண்டறிய முடியவில்லை. இருந்தாலும் இதன் மதிப்பு பல கோடி ரூபாயைத் தாண்டும் என்றுதெரிகிறது.
இந்த அழகிய பஞ்ச லோக நடராஜர் சிலை தற்போது சிவகங்கை மாவட்ட அருங்காட்சியகத்தில்வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் இதைக் கண்டு அதிசயித்து வருகின்றனர்.
-->


