டெல்லியில் புடின்: வாஜ்பாயுடன் முக்கிய ஆலோசனை
டெல்லி:
டெல்லியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் பிரதமர் வாஜ்பாயும் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு தனது சீன பயணத்தை முடித்துக் கொண்டு புடின் டெல்லி வந்தார்.
சொதப்பிய அமைச்சர்:
இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வசுந்தரா ராஜேயும் வெளியுறவுத்துறை செயலாளர் கன்வால் சிபலும் அவரைவரவேற்றனர். முன்னதாக அவரை வரவேற்பதில் அமைச்சர் வசுந்தராவும் செயலாளர் கன்வால் சிபலும் சொதப்பிவிட்டனர்.
புடினின் விமானம் தரையிறங்கிய பின்னரும் கூட இந்த இருவரும் விமான நிலையத்துக்கு வந்து சேரவில்லை. சிறிது நேரம்இவர்களுக்காக காத்திருந்த ரஷ்ய அதிகாரிகள் பின்னர் புடினை கீழே இறங்குமாறு கூற அவரும் மனைவியும் விமானத்தில்இருந்து கீழே வந்தனர்.
ஆனால், அவர்களை கீழ் நிலை இந்திய அதிகாரிகளும் ரஷ்ய தூதரக அதிகாரிகளும் மட்டுமே வரவேற்றனர். வரவேற்பைமுடித்துக் கொண்டு புடின் காரில் ஏறப் போன நேரத்தில் தான் வசுந்தரா வந்து சேர்ந்தார்.
டிராபிக் ஜாம் காரணமாக சரியான நேரத்தில் வர முடியவில்லை என்று சாக்கு சொன்னார் வசுந்தரா.
வாஜ்பாய் வீட்டில் விருந்து:
ஆனால், இதை ரஷ்ய அதிபரும் அதிகாரிகளும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. விமான நிலையத்தில் இருந்து புடினும்அவரது மனைவி லுயுட்மில்லாவும் நேராக பிரதமர் வாஜ்பாயின் இல்லத்துக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு வாஜ்பாய் இரவுவிருந்தளித்தார்.
இதில் அத்வானி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் பங்கேற்றனர். சோனியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்ததால் பங்கேற்கவில்லை.
பின்னர் வாஜ்பாயுடன் தனியே புடின் பேச்சு நடத்தினார். முதலில் 2 நாள் பயணமாக இந்தியா வர இருந்த அவர் அதை 3நாட்களாக நீட்டித்துவிட்டார்.
இதன் பின்னர் புடினும் வாஜ்பாயும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட இரு நாடுகளும்இணைந்து செயல்படப் போவதாக கூறப்பட்டிருந்தது.
ஜனாதிபதி கலாம் வரவேற்பு:
இன்று காலை அதிபர் புடினுக்கு முறைப்படியான அரசு மரியாதை வழங்கப்பட்டது. ராஷ்ட்ரபதி மாளிகையில் அவருக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு தரப்பட்டது. 21 பீரங்கி குண்டுகள் முழங்க அவருக்கு வரவேற்பு தரப்பட்டது. முப்படையினரும் அணி வகுப்புமரியாதையும் புடின் ஏற்றுக் கொண்டார்.
அவரை ஜனாதிபதி அப்துல் கலாமும் வாஜ்பாயும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய புடின், தீவிரவாதத்தை ஒடுக்குவது தான் இப்போது சர்வதேச சமுதாயத்தின் முன் உள்ள மிகமுக்கியமான பணியாகும். ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையும் நட்புறவும் உள்ளது. இரு நாடுகளும்பல பிரச்சனைகளில் சேர்ந்து பணியாற்ற முடியும்.
அது குறித்து இந்தியத் தலைவர்களுடன் பேசுவேன் என்றார்.
மீண்டும் சொதப்பிய அதிகாரிகள்:
நேற்று விமான நிலையத்தில் நடந்தது போலவே இன்று ஜனாதிபதி மாளிகையிலும் புடினை வரவேற்பதில் குழப்பம் நேர்ந்தது.
வழக்கமாக பிரதமர், அவரைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதி, அதையடுத்து புடின் வந்திருக்க வேண்டும். இது அடுத்தடுத்துதொடர்ந்து நடக்கும். இதனால் எந்தத் தலைவரும் காத்திருக்க நேராது.
ஆனால், வாஜ்பாயும் அப்துல் கலாமும் வந்து அமர்ந்து 15 நிமிடம் ஆன பிறகு தான் புடின் அழைத்து வரப்பட்டார். இதனால்ஜனாதிபதியும் வாஜ்பாயும் நீண்ட நேரம் கடும் குளிரில் வெளியே அமர்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை தொடக்கம்:
இதைத் தொடர்ந்து அப்துல் கலாமுடன் பேச்சு நடத்திய புடின் வாஜ்பாயுடன் பேச்சு நடத்தினார். இரு தலைவர்களும் பல சுற்றுபேச்சு நடத்துவர்.
பாகிஸ்தானின் தீவிரவாதத்தை நசுக்குவது, இந்தியாவுக்கு அதி நவீன ஆயுதங்கள், கப்பல்கள், விமானங்கள் தருவது,பொருளாதார ஒத்துழைப்பு உள்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
மேலும் தமிழகத்தில் கூடாங்குளத்தில் கட்டப்பட்டு வரும் அணு மின் நிலையத்துக்கு ரஷ்யாவிடம் இருந்து மேலும் 2 அணுஉலைகளைப் பெறுவது குறித்தும் பேச்சு நடத்தப்படும் என்று தெரிகிறது.
டெல்லி ஒப்பந்தம்:
இருவரும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து இருதலைவர்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்க டெல்லி பிரகடனத்தை வெளியிட உள்ளனர்.
மகாத்மாவின் சமாதியில்...
பின்னர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மாவின் சிலையில் புடினும் அவரது மனைவியும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான் வைத்த ஹிம்சாம்ாபா ரக மரக் கன்றை அவர் பார்க்கச் சென்றார். அது இப்போதுமரமாக வளர்ந்து நிற்பதைப் பார்த்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
-->


