சென்னை பள்ளிகளில் வெடிகுண்டு புரளி: பெற்றோர்-மாணவர்கள் பீதி
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சில பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கிளம்பிய புரளியால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சைதாப்பேட்டை ஜோன்ஸ் தெருவில் மாநகராட்சி பள்ளி உள்ளது. அங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகபள்ளி தலைமை ஆசிரியருக்கு மிரட்டல் தொலைபேசி வந்தது.
இதையடுத்து அவர் சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தந்தார். வெடிகுண்டு இருப்பதாக கிளம்பியசெய்தியால், மாணவர்களும், ஆசிரியர்களும் பதறிப் போய் வெளியே ஓடினர். பெற்றோர்களும் அலறி அடித்துக்கொண்டு பள்ளிகளுக்கு ஓடி வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸாரும் உடனே வந்து பள்ளியை இழுத்து மூடினர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதிலும்சோதனை நடத்தினர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
அதேசமயத்தில், அரங்கநாதன் சுரங்கப் பாதை அருகே உள்ள ஆக்ஸ்போர்டு பள்ளியிலும் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக புரளி கிளம்பியது. அங்கும் பதற்றம் ஏற்பட்டது. மாணவர்களை அவர்களது பெற்றோர்வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கும் சோதனை நடந்தது. ஆனால், அந்தத் தகவலும் புரளி என்று தெரிய வந்தது. யாரோ ஒரு விஷமி இப்படிபொய்யான தகவலைக் கிளப்பியிருக்கிறான்.
-->


