For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளை அறிக்கை கோருகிறார் இளங்கோவன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அடிக்கடி அமைச்சர்கள் மாற்றப்படுவது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ்கட்சி கோரியுள்ளது.

தமிழக காங்கிரஸ் செயல் தலைவரான இளங்கோவன் நிருபர்களிடம் பேசுகையில்,

ஏதோ ஒரு முறை இரண்டு முறை அமைச்சர்கள் மாற்றப்பட்டால் அது இயற்கையானது. ஆனால், ஆட்சிக்கு வந்த சுமார் 20மாதங்களில் 23 அமைச்சர்களை மாற்றியுள்ளார் ஜெயலலிதா. இதன் பின்னணி என்ன?, இவர்கள் செய்த மோசடிகள் என்னஎன்பது குறித்து மக்களுக்கு விளக்க வேண்டிய கட்டாயம் ஜெயலலிதாவுக்கு உண்டு.

அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவது என்பது ஜனநாயகத்துக்கும் விதிமுறைகளுக்கும் முரணானது.

அதே நேரத்தில் மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக நீக்கப்பட்ட பலர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பிடித்தும் வருகின்றனர்.இது ஏன்?. இவர்கள் ஏன் நீக்கப்பட்டார்கள், ஏன் சேர்க்கப்பட்டார்கள்?

அதிமுக ஆட்சி காலியாவதற்குள் தனது கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் ஒருமுறையாவது அமைச்சர் பதவியைத் தந்துஅவர்களை சம்பாதிக்க வைத்து குபேரர்களாக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். இதன் மூலம் மக்கள் பணத்தை கொள்ளைஅடித்து இவர்களைக் கோடீஸ்வரர்கள் ஆக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்தியது மாதிரி மக்கள் அனைவரும் இணைந்துஜெயலலிதாவே வெளியேறு போராட்டம் நடத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் போடவும் யோசித்துவருகிறோம்.

காங்கிரஸ் கட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளின் கூட்டம் நாளை நடக்கும். அதில் ஜெயலலிதா அரசின்செயல்பாடுகள், தவறான கொள்ளைகள் குறித்தும் அதை எதிர்ப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்றார் இளங்கோவன்.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X