For Daily Alerts
Just In
மதுரை அருகே ஓடும் போதே எரிந்த பஸ்: பயணிகள் தப்பினர்
மதுரை:
கோவில்பட்டி அருகே ஓடிக் கொண்டிருந்த பஸ்சில் தீப் பிடித்தது. ஆனால், இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும்உயிரிழக்கவில்லை.
மதுரையில் இருந்து ஒரு அரசுப் பேருந்து இன்று காலை திருநெல்வேலிக்குப் புறப்பட்ட்டது. கோவில்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தபோது பஸ்சுக்குள் புகை வந்தது. டீசல் வாடையும் வீசியது. சிறிது நேரத்தில் பஸ்சுக்குள் தீ பிடித்தது. இதையடுத்துடிரைவர் பஸ்ஸை நிறுத்தினார்.
பயணிகள் அனைவரும் இறங்கி ஓடினர். சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் மளமளவென தீ பரவியது.
டீசல் டேங்க் வெடிக்கலாம் என்பதால் யாரும் அருகில் செல்லவில்லை. பின்னர் தீயணைப்புப் படையினர் வந்து தீயைஅணைத்தனர். ஆனால் அதற்குள் பஸ் எரிந்து எலும்புக் கூடாகிவிட்டது.
-->


