For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மா, நீங்க தேசிய அரசியலுக்கு போகனும்மா .. அதிமுக பொதுக் குழுவில் உணர்ச்சிவசம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இன்று தொடங்கிய அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய பெரும்பாலான நிர்வாகிகளும் அம்மா, நீங்க தேசியஅரசியலுக்கு போகனும்மா என்று ஓவராக உணர்ச்சிவசப்பட்டனர்.

கட்சியின் எம்.பியான பி.எச். பாண்டியன் இந்த வாதத்தைத் துவக்கி வைக்க அடுத்தடுத்துப் பேசிய அனைவருமே தாயே, தேசியஅரசியலில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுவிட்டதால் அந்த இடத்தை நீங்கள் தான் நிரப்ப வேண்டும் என்ற ரீதியில்வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே உணர்ச்சியுடன் பேசினர்.

அக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் இன்று தொடங்கியது. 2001ம்ஆண்டில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் ஜெயலலிதா கூட்டிய முதல் பொதுக் குழுக் கூட்டம் இது. இதற்கு முன் இன்றுகாலை கட்சியின் செயற்குழுக் கூட்டமும் நடந்தது. புலமைப் பித்தனை கட்சியின் அவைத் தலைவராக ஜெயலலிதா நியமித்ததற்குசெயற்குழு ஒப்புதல் வழங்கியது.

காளிமுத்து சபாநாயகரானதையடுத்து புலமைைப் பித்தனை அவைத் தலைவராக்கினார் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலம் முழுவதும் இருந்தும் 3,000 அதிமுக நிர்வாகிகள் இந்த பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கட்சியின் மாநிலநிர்வாகிகள் அனைவரும் இக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

விஜயசேஷ மகாலில் நடக்கும் இக் கூட்டம் நாளையும் நீடிக்கும். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.தேசிய அளவில் இப்போது யாருடனும் அதிமுகவுக்கு கூட்டணி இல்லை.

ஆனால், பா.ஜ.கவுடன் தொடர்ந்து அக் கட்சி நெருங்கி வருகிறது. இது குறித்தும், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால் மக்கள்மத்தியிலும் தொண்டர்கள் மத்தியில் என்ன ரியாக்ஷன் இருக்கும் என்பது குறித்தும் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஜெயலலிதாஆலோசித்து வருகிறார்.

அப்போது பேசிய பி.எச். பாண்டியன், அம்மா, நீங்கள் தேசிய அரசியலில் நுழைய இது தான் சரியான சந்தர்ப்பம். இதை மிகஅழகாகப் பயன்படுத்தி பெரிய அளவில் தேசிய அரசியலில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றார்.

எதைத் தான் பேசி அம்மாவை புளகாங்கிதப் பட வைப்பது என்று காத்திருந்த பிற நிர்வாகிகளும் ஓட்டை ரெக்கார்ட் மாதிரிஇதையே முன் வைத்துப் பேசினர். சிலர் கண்ணீருடன் உணர்ச்சி வசப்பட்டனர்.

மேலும் சில நிர்வாகிகள், அம்மா, நீங்கள் கொண்டு வந்த மத மாற்றத் தடைச் சட்டம் மிகச் சரியானது. உங்களை மாதிரி ஒருதலைவர் தேசிய அரசியலுக்கு வேணும்மா என்று புகழ்ந்து தள்ளினர்.

பல நேரங்களில் இந்த ஓவர் புகழ்ச்சிகளால் எரிச்சலடைந்த ஜெயலலிதா நிர்வாகிகளின் பேச்சை பாதியில் தடுத்து நிறுத்தி, மக்கள்பிரச்சனைகள் பத்தி பேசுங்க என்றார்.

இதன் பின்னர் உருப்படியான விவாதங்கள் நடந்தன. இலவச மின்சாரத்தை ரத்து செய்வது என்ற முடிவு கொஞ்சம் யோசிக்கவேண்டியது என்று பேசிய நிர்வாகிகள் இதற்கு திமுக ஆட்சியின் தவறான அணுகுமுறை தான் காரணம் என்பதை மக்களிடையேநாம் விளக்க வேண்டும் என்றனர்.

இடைத் தேர்தல்:

இதுதவிர சாத்தான்குளம் இடைத் தேர்தல் மற்றும் எதிர்வரும் தேர்தல்களில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்தும் கட்சியினரின் கருத்தை அறியஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

சென்னை மேயர் தேர்தல் நடக்கவிருப்பதால் அது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுக் குழுக் கூட்டத்துக்குப் பின் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், ஒருவித கிலியுடன் தான் பொதுக் குழு உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் வந்து அமர்ந்துள்ளனர்.

மேலும் தொண்டர்களை அமைச்சர்கள் எப்படி நடத்துகிறார்கள், டெண்டர்கள், அரசின் திட்டங்கங்களால் ஆட்சியால்கட்சியினருக்கு போதிய பலன் கிடைக்கிறதா போன்ற முக்கிய விஷயங்கள் இதில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர். பல அமைச்சர்களுக்கு எதிராக கட்சியினரே எதிர்ப்பு ஓலைவாசிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விரைவில் மீண்டும் அமைச்சரவையிலும் ஒட்டுமொத்த மாற்றம்வரலாம்.

இதுபோக, கட்சிக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் முத்துச்சாமி போன்ற அனுபவசாலிகளுக்கு முக்கிய கட்சிப்பதவி கொடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பொதுக் குழுக் கூட்டத்தையொட்டி விஜயசேஷ மகாலிலும் கட்சி அலுவலகத்திலும் மிக பலத்த பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X