நிலக்கரி ஊழல்: முன்னாள் தலைமை செயலருக்கு எதிராக சு. சுவாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
டெல்லி:
நிலக்கரி ஊழல் வழக்கில் தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஹரி பாஸ்கர் போலியானஆவணங்களைத் தாக்கல் செய்ததாகக் கூறி ஜனதா தளத் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த அவதூறுவழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்ததாக முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர்ஜெயலலிதா, ஹரி பாஸ்கர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் ஹரி பாஸ்கர் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்தார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில்சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் அவருடைய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார் சுவாமி.
நீதிபதி என். சந்தோஷ் மற்றும் நீதிபதி பி.பி. சிங் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் இம்மனுவைவிசாரித்தது.
ஆனால் ஜெயலலிதா ஆட்சியின்போது தலைமைச் செயலாளராக இருந்ததால் ஹரி பாஸ்கர் போலியானஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார் என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. எனவே இந்த மனுவைத்தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.
நிலக்கரி ஊழல் வழக்கில் ஹரி பாஸ்கர் ஏற்கனவே விடுதலையாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-->


