காஷ்மீரில் போர் விமானம் விழுந்து ஒருவர் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் மிக்-21 ரக போர் விமானம் ஒரு வீட்டில் மீது விழுந்து நொறுங்கியதில் அந்த வீட்டிலிருந்த ஒருவர்உயிரிழந்தார்.
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இந்த மிக் விமானம் இன்று பிற்பகல் வழக்கம்போல் பயிற்சிக்காகக்கிளம்பிச் சென்றது. ஆனால் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து விமானத்தை ஓட்டிக் கொண்டிருந்த பைலட் பாராசூட்டைப் பயன்படுத்தி உடனடியாக வெளியேகுதித்துத் தப்பித்து விட்டார். இதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்த அந்த மிக் விமானம் பட்காம்மாவட்டத்தில் உள்ள லால்காம் என்ற கிராமத்தில் ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.
இன்று பகல் 2.25 மணிக்கு நடந்த இச்சம்பவத்தில் அந்த வீட்டிலிருந்த குலாம் அஹமத் கனாய் (50) என்பவர் உடல்சிதறி உயிரிழந்தார். அவருடைய மகன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விமானம் விழுந்தவுடன் அந்த வீடு தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்திலேயே அந்த வீடு முழுவதுமாக எரிந்துசாம்பலானது.
உயரதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். மீட்புப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
மிக் விமானங்கள் நொறுங்கி விழும் சம்பவங்கள் சமீப காலத்தில் அதிகரித்துக் கொண்டே உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-->


