அம்பேத்கார் சிலையின் "தலை" துண்டிப்பு: மதுராந்தகத்தில் பதற்றம்
மதுராந்தகம்:
மதுராந்தகத்தில் நிறுவப்பட்டிருந்த அம்பேத்காரின் சிலையின் "தலை"யைத் துண்டித்து யாரோ எடுத்துக் கொண்டுசென்று விட்டனர். இதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆயுதமேந்திய போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1993ல் அமைக்கப்பட்ட ஆறு அடி உயரமுள்ள இந்தச் சிலை மதுராந்தகம் பைபாஸ் சாலையில்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத சிலர் அம்பேத்காரின் சிலையைச் சேதப்படுத்தினர்.பின்னர் அந்தச் சிலையின் "தலை"யை மட்டும் துண்டித்து எடுத்துச் சென்றுவிட்டனர்.
அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் காலை எழுந்த பின்னர்தான் இதைக் கண்டனர். சிலையின் "தலை"துண்டிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான ஆயுதமேந்திய போலீசார்குவிக்கப்பட்டனர்.
சிலையைச் சேதப்படுத்தியவர்களை விரைவில் கண்டுபிடிப்போம் என்று கூறிய போலீஸ் அதிகாரிகள், உடைந்தசிலைக்குப் பதிலாக வேறு ஒரு புதிய சிலை உடனடியாக அமைக்கப்படும் என்றும் சிலை அமைப்புக்குழுவினரிடம் உறுதி அளித்தனர்.
சிலை உடைப்பு தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->


