நெய்வேலி அருகே பயங்கர வெடிகுண்டுகளுடன் 3 தீவிரவாதிகள் கைது
நெய்வேலி:
நெய்வேலி அருகே பயங்கர வெடிகுண்டுகளுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த தமிழர் விடுதலைப்படையைச்சேர்ந்த 3 தீவிரவாதிகளை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இந்தத் தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்து கடலூர் மாவட்ட போலீசாருக்கு ரகசியத் தகவல் வந்தது.இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நெய்வேலி அருகே சேந்தியாதோப்பு பகுதியில் மூன்று தீவிரவாதிகள் சென்று கொண்டிருப்பதாகத்தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடலூர் மாவட்ட எஸ்.பி. தலைமையிலான தனிப்படைப் போலீசார் நெய்வேலி அருகே தீவிரவாகன சோதனை நடத்தினர்.
அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று பேர் போலீசார் கூறியும், நிற்காமல் விரைந்தனர். இதையடுத்து அவர்களைப்போலீசார் துரத்தினர்.
சிறிது தூரம் துரத்திய பின்னர் அந்த மூன்று பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போதுஅவர்களிடம் ஏராளமான வெடிகுண்டுகள், டெட்டனேட்டர்கள் மற்றும் குழாய் வெடிகுண்டுகள் ஆகியவைஇருப்பதைக் கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் தமிழர்விடுதலைப்படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்பதும் அவர்களுடைய பெயர்கள் ராமசாமி, ரவிச்சந்திரன்,தங்கமணி என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. சுப. இளவரசன் தலைமையிலான விடுதலைப்படைஇயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் அவர்கள் என்பதும் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 4 வெடிகுண்டுகளும், 10 ஜெலட்டின் குச்சிகளும், 15 டெட்டனேட்டர்களும்கைப்பற்றப்பட்டன.
இந்தப் பயங்கரமான வெடிகுண்டுகள் மூலம் அவர்கள் என்ன சதிவேலைக்குத் திட்டமிட்டிருந்தனர் என்பதுகுறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->


