சர்க்கரை நோயாளிகளுக்கான "இன்சுலின்" மருந்து விலை குறைந்தது
சென்னை:
சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் வகையில் அந்நோய்க்குத் தடுப்பு மருந்தான "இன்சுலின்" விலை ரூ.145ஆகக்குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்சுலின் மருந்தைத் தயாரித்து வரும் நோவோ நோர்டிஸ்க் இந்தியா லிமிடெட் என்றநிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான டாக்டர் அனில் கபூர் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
இந்தியாவில் சுமார் 3.5 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்களை மனத்தில் கொண்டே "இன்சுலின்" விலையைக் குறைக்க நாங்கள் முடிவு செய்தோம்.
அதன்படி தற்போது ரூ.197க்கு விற்கப்பட்டு வரும் "இன்சுலின்" விலை ரூ.145ஆகக் குறைக்கப்படுகிறது. அடுத்தஇரண்டு வாரங்களில் இந்த விலைக்குறைப்பு அமலுக்கு வரும்.
ஆனாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு அரசுதான் மேற்கொண்டு உதவவேண்டும் என்றார் டாக்டர் கபூர்.
-->












Click it and Unblock the Notifications