திருமண வீட்டில் தறிகெட்டு ஓடிய யானை: 7 பேர் காயம்
திருநெல்வேலி:
முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ணகுமாரின் இல்லத் திருமணத்தின்போது கோவில் யானை திடீரென்றுதறிகெட்டு ஓடியதில் 7 பேர் காயமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் நேற்று கிருஷ்ணகுமாரின் மகள்ஐஸ்வர்யாவின் திருமணம் நடந்தது.
திருமணத்தையொட்டி யானைகள் ஊர்வலத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சில யானைகள்வரவழைக்கப்பட்டு நின்று கொண்டிருந்தன. இந்த யானைகளுக்கு சுசீந்திரம் கோவில் யானை "கோபாலன்"தலைமை தாங்குவதாக இருந்தது.
முன்னதாக, யானைகளை சில புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போதுகேமராவிலிருந்து வந்த பிளாஷ் ஒளி பட்டு, "கோபாலன்" மிரண்டது.
பயத்தில் அந்த யானை தறி கெட்டு ஓட ஆரம்பித்தது. இதில் ஸ்ரீகண்டன் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
அதேபோல, ஆறு வயது சிறுவன் அபிஷேக் உள்பட 7 பேர் யானை மிதித்ததிலும் துதிக்கையால் அடித்ததிலும்பலத்த காயமடைந்தனர்.
பிறகு யானைப் பாகன்களின் உதவியுடன் அந்த யானை அடக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
-->


