For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவாசாயின் தற்கொலையை சாராயச் சாவு என்கிறது அரசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தஞ்சாவூரில் விவசாயி வீரையன் குடும்பப் பிரச்சனையாலும் குடிப் பழக்கத்தாலும் தான் இறந்ததார் என்று தமிழகஅரசு கூறியுள்ளது.

இது கொஞ்சம் கூட மனிதாபிமானற்ற செயல் என காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் கண்டனம்தெரிவித்துள்ளார்.

சம்பா பயிர் விளைவிக்க ஏராளமான கடன் வாங்கிய வீரையன் காவிரியில் நீர் வராததால் அந்த நெற்பயிரைக்காப்பாற்ற முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

ஆனால், வீரையன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும் குடிக்க மனைவியிடம் பணம் கேட்டதாகவும் அதைத் தரமனைவி மறுத்ததால் சண்டை வந்தாகவும் இதைத் தொடர்ந்து அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

இதற்கு இளங்கோவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சம்பா பயிரிட பல ஆயிரம் கடன் வாங்கிய வீரையன் தண்ணீர் இல்லாமல் போனதால் வாழ்க்கை வெறுத்துப் போய்தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விவசாயத்துக்கு தண்ணீர் தரக் கூட அருகதை இல்லாத அரசு வீரையனின் தற்கொலையை அடுத்து நடுத்தெருவில்நிற்கும் அவரது குடும்பத்துக்காவது உதவியிருக்கலாம்.

அதைவிட்டுவிட்டு அவரது மரணத்தையே சாராயச் சாவு என்று சொல்லி விவசாயிகளையேஅசிங்கப்படுத்தியிருக்கிறது தமிழக அரசு.

மனிதாபிமே இல்லாமல் இது போலப் பேச ஜெயலலிதாவின் அரசால் மட்டுமே முடியும். வரும் 9ம் தேதி காவிரிப்பாசனப் பகுதி மாவட்டங்களில் விவசாயச் சங்கங்கள் நடத்தவுள்ள வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும்.

அதிமுக அரசுக்கு இரக்கமோ, மனிதாபிமானமோ, நிர்வாகத் திறனோ, திட்டமிட்ட அணுகுமுறையோ கிடையாதுஎன்பதைத் தான விவசாயியின் தற்கொலை எடுத்துக் காட்டுகிறது.

பரிதாபத்துக்குரிய அந்த விவசாயிக்கு குறைந்தபட்ச இரங்கலைக் கூடத் தெரிவிக்க அரசுக்கு மனம் இல்லாமல்போய் விட்டது வருத்தத்துக்குரியது. அதிமுக அரசின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இதுவும் ஒருஉதாரணமாகியுள்ளது என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

அரசு தான் காரணம்:

இதற்கிடையே விவசாயியின் இந்தத் தற்கொலைக்கு ஜெயலலிதா அரசு தான் காரணம் என விவசாயச் சங்கத்தலைவர் சிவசாமி கூறியுள்ளார்.

மதுக்கடைகளைத் திறந்துவிட்டதே இந்த அரசு தான். இதனால் சாராயம் குடிப்பது என்பது கிராமங்களில் புதியபழக்கமல்ல. நீர் இல்லாமல் தற்கொலை செய்த அந்த ஏழை விவசாயியின் குடும்பத்துக்கு அரசு உடனே உதவிசெய்ய வேண்டும் என்றார்.

வறண்டது மேட்டூர் அணை:

இதற்கிடையே மேட்டூர் அணை வறண்டு குளம் போல காணப்படுகிறது.

காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் ஒரே நம்பிக்கையான மேட்டூர் அணையில் நீர் மட்டம் மிகவும்குறைந்துவிட்டது. அணையில் உள்ள நந்தி சிலையும், சிதிலமடைந்த கோவில் கட்டிடங்களும் வெளியே தெரியஆரம்பித்துள்ளன.

இதில் உள்ள நீர் இன்னும் 4 நாட்களுக்குத்தான் பாசனத்திற்கு போதுமானதாக இருக்கும். அதுவும் கடை மடைப்பகுதிகளான நாகப்பட்டனம், திருவாரூர் பகுதிகளுக்கு சுத்தமாக நீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகம் தண்ணீர் தர வேண்டும், இல்லாவிட்டால் மழை பெய்ய வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றுநடந்தால்தான் தமிவகத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பாவைக் காப்பாற்ற முடியும்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X