மதுரையில் ரூ.7.5 கோடி ஹெராயின் பறிமுதல்: 5 பேர் கைது
மதுரை:
மதுரையிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ.7.5 கோடி மதிப்புள்ள ஹெராயினை போதைப் பொருள்தடுப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் உள்ள பாண்டியன் ஹோட்டலில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சிலர் இருப்பதாகப் போதைப்பொருள் தடுப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து போதைப் பொருள் தடுப்புத் துறையினர் அந்த ஹோட்டலைச் சுற்றி வளைத்தனர்.
கொச்சியைச் சேர்ந்த கோமா என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு அறையில் சோதனைநடத்தியபோது அங்கு 7.5 கிலோ ஹெராயின் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த ஹெராயினைப் பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்புத் துறையினர் அந்த அறையிலிருந்தஐந்து பேரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் விலை சர்வதேச மார்க்கெட்டில் ரூ.7.5 கோடி என்று தெரிய வந்துள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் கடத்தலில் ஈடுபடுவது சிரமமான காரியம் என்பதால் மதுரையை அவர்கள்தேர்ந்தெடுத்துள்ளனர். மும்பையிலிருந்து கொச்சி வழியாக அவர்கள் காரிலேயே மதுரை வந்துள்ளனர்.
இந்த போதைப் பொருள் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்தபோதுதான் போதைப் பொருள் தடுப்புத் துறையினர்மடக்கிப் பிடித்து விட்டனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்றக் காவலில்வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கொச்சி மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மதுரையில் இந்த அளவுக்கு மிகப் பெரிய போதைப் பொருள் வேட்டை நடந்துள்ளது இதுவே முதல் முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
மதுரையில் கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 44 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 11பேர் கைது செய்யப்பட்டனர். தற்போதைய கைதின் மூலம், மதுரையை தளமாகக் கொண்டு ஹெராயின்கடத்தல்காரர்கள் செயல்பட்டு ருவது நிரூபணமாகியுள்ளது.
-->


