For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பனுடன் சேர்ந்து நாகப்பாவை கடத்திய 3 தீவிரவாதிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

சத்தியமங்கலம்:

வீரப்பனுடன் சேர்ந்து கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவைக் கடத்திய 2 தமிழ் தீவிரவாதிகள் உள்ளிட்ட 3பேரை தமிழக அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ம் தேதி சந்தனக் கடத்தல் வீரப்பனால் நாகப்பா கடத்தப்பட்டார். காட்டுக்குள்ளேயேபல்வேறு இடங்களுக்கு அலைக்கழிக்கப்பட்ட நாகப்பா கடந்த டிசம்பர் 8ம் தேதி கொள்ளேகால் அருகில் உள்ளசெங்கடி காட்டுப் பகுதியில் பிணமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து வீரப்பனைத் தேடும் பணியை தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நாகப்பாவின் கடத்தல் விவகாரத்தில் வீரப்பனுடன் வேறு யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதுகுறித்து தமிழக அதிரடிப்படையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

சுப இளவரசன் கும்பலுக்கு தொடர்பு:

தமிழக அதிரடிப்படை தலைவர் நடராஜ் தலைமையிலான தனிப் படை போலீசார் இதுகுறித்து விசாரித்து வந்தனர்.விசாரணையின்போது, தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சுப இளவரசன் தலைமையிலான கும்பலுக்கும்நாகப்பா கடத்தலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

நாகப்பாவைக் கடத்துவதற்கு இந்தக் கும்பல்தான் வீரப்பனுக்கு உதவியதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்தக்கும்பலைச் சேர்ந்தவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் பெரம்பலூர் அருகே முந்திரிக் காட்டுப் பகுதியில் தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடிப்படை எஸ்.பி. சண்முகவேல் தலைமையிலான தனிப்படை அங்கு விரைந்து தேடுதல் வேட்டை நடத்தியது.

3 தீவிரவாதிகள் கைது:

முந்திரிக் காட்டுக்குள் பதுங்கியிருந்த டெய்லர் பாலு என்ற பாலமுருகன் (31), பாக்யராஜ் (25) மற்றும் ராஜா என்றஅலெக்ஸாண்டர் (30) ஆகிய மூன்று தீவிரவாதிகளை நேற்று முன் தினம் அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

இவர்களில் பாலமுருகனும் பாக்யராஜும் தமிழ் தீவிரவாதிகள். மற்றொருவனான ராஜா கர்நாடக மாநிலம்ஒட்டாரதொட்டி என்ற இடத்தைச் சேர்ந்தவன்.

இந்த மூலரும் அளித்த தகவலை வைத்து பன்னாரி காட்டுப் பகுதியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆயுதங்கள்,வெடிபொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்:

இவர்கள் மூவரும் நாகப்பாவைக் கடத்தியது குறித்து போலீசாரிடம் பரபரப்பான விவரங்களைத்தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

நாகப்பாவை மட்டுமில்லாமல் கர்நாடக அமைச்சர் ராஜு கெளடாவையும் சேர்த்தே கடத்த வீரப்பன்திட்டமிட்டிருந்தான். இது தொடர்பாக சுப இளவரசனிடம் அவன் உதவி கோரினான்.

இந்தக் கடத்தலுக்கு உதவி செய்தால் ரூ.10 லட்சம் வரை பணம் கொடுப்பதாகவும் இளவரசனிடம் வீரப்பன்கூறினான்.

இதையடுத்துதான் பாலமுருகன், ராஜா மற்றும் அமுல்ராஜ் ஆகியோர் மூலம் வீரப்பனுடன் பலமுறை பேச்சுநடத்தினான் இளவரசன்.

ஒவ்வொரு முறையும் பாலமுருகன் காட்டுக்குள் சென்று வீரப்பனைச் சந்திக்கும் போதெல்லாம் ஏ.கே.47 துப்பாக்கிதோட்டாக்கள், வெடிபொருட்கள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றையும் தந்துவிட்டு வந்தான்.

இதன் பின்னர் வீரப்பனிடம் பாக்யராஜ், சேதுமணி, செல்வம், சங்கர், பாலமுருகன், அமுல்ராஜ், ராஜா, ஆகியதீவிரவாதிகளைக் காட்டுக்கு அனுப்பி வைத்தான் இளவரசன்.

இவர்களும், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுண்டன், மற்றும் கர்நாடக மாநிலம் ராமபுரா பகுதியைச் சேர்ந்தபலரும் இணைந்து மொத்தம் 25 பேர் கொண்ட கும்பலாக வீரப்பன் தலைமையில் சென்று தான் நாகப்பாவைக்கடத்தினர். கடத்தலுக்கு உதவியவர்களில் பெரும்பாலானவர்கள் கர்நாடக மாநிலம் பொன்னாச்சி, மாரத்தள்ளி,கொளத்தள்ளி, ராமாபுரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

கடத்தலுக்குப் பின்னர் வீரப்பனுடன் சுமார் 80 நாட்கள் வரை பாக்யராஜ் காட்டுக்குள்ளேயே இருந்துள்ளான்.கடந்த தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்புதான் காட்டிலிருந்து அவன் வெளியே வந்தான்.

இதன் பின்னர்தான் கடந்த நவம்பர் 19ம் தேதி நெய்வேலி அருகே உள்ள மின் கோபுரத்தை பாக்யராஜும்இளவரசனும் சேர்ந்து குண்டு வைத்து தகர்த்தனர். இந்த மின் கோபுரம் கர்நாடகத்திற்கு மின்சாரத்தைக் கொண்டுசெல்லப் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் நேற்று சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த அனைத்துத் தகவல்களையும் கூட்டு அதிரடிப்படையின் தலைவரான வால்டர் தேவாரம் நேற்று நிருபர்களிடம்தெரிவித்தார். நாகப்பா கடத்தலில் தொடர்புடைய மற்ற அனைவரையும் விரைவில் கைது செய்யப் போவதாகவும்அவர் கூறினார்.

இவர்கள் கைது செய்யப்பட்டன் மூலம் நாகப்பாவை தமிழ்நாடு விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என்ற வாதம் வலுவடைந்துள்ளது.

நாகப்பா கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய அதிரடிப்படை போலீஸார் தீவிரமாகஇறங்கியுள்ளனர்.

P uUS v {ut;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X