For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேனியில் 200 தலித்கள் மதம் மாற முடிவு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 200 தலித் மக்கள் மதம் மாற முடிவுசெய்துள்ளனர்.

சுடுகாட்டுக்குச் செல்ல தங்களுக்குப் பாதை மறுக்கப்படுவதால், மதம் மாற அவர்கள் முடிவு செய்து தேனி மாவட்டஆட்சியரிடம் அனுமதி கோரியுள்ளனர்.

தேவாரம் அருகே உள்ளது மேட்டுப்பட்டி கிராமம். இங்கு தலித் மக்களும், தேவர்கள், நாடார்கள், நாயுடுகள்,செட்டியார்கள் என பல சமூகத்தினரும் வசிக்கிறார்கள்.

தலித் மக்களுக்கு இங்கு இன்னும் சம உரிமை வழங்கப்படவில்லை என்ற புகார் கூறப்படுகிறது.

தலித் மக்கள் யாராவது இறந்து விட்டால், சுடுகாட்டுக்குச் செல்ல கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு ஓடையைக்கடந்துதான் செல்ல வேண்டும்.

ஆனால் இந்தப் பாதை திறந்தவெளி கழிப்பிடமாக மாறி விட்டது. இதில் நடந்து செல்லவே முடியாது. மேலும்மழை பெய்தால் ஓடை நிரம்பி விடும் என்பதால் அதை கடந்து செல்லவும் முடியாது.

இதுபோன்ற சமயங்களில் மற்ற சமூகத்தினர் வசிக்கும் கிராமத்திற்குள் உள்ள பாதை வழியாகத்தான் சுடுகாட்டைஅடைய முடியும். ஆனால் இந்தப் பாதையை தலித் மக்கள் பயன்படுத்தக் கூடாது என்று அந்தக் கிராமத்தில்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக இதற்கு முன் பலமுறை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தலித் மக்களில் யாராவது இறந்து விட்டால்அவரது உடலை அடக்கம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

ஒருமுறை பிரச்சினை பெரிதாகி, பிணம் சாலையிலேயே போடப்பட்டு போலீசார் வந்து பிணத்தை எடுத்துச்செல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.

இதுதொடர்பாக மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் அமைதிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, இருதரப்பினரையும் அழைத்து பொது வழியை தலித் மக்களும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்.

ஆனால் "உயர் ஜாதிக்காரர்கள்" அதை மதிப்பதேயில்லை என்று தலித் மக்கள் புகார் கூறுகிறார்கள். தங்களது பாதைவழியாக தலித் மக்கள் வரவே கூடாது. வேண்டுமானால் அவர்களுக்காக தனிப் பாதை அமைத்துக் கொள்ளட்டும்என்று "உயர் ஜாதிக்காரர்கள்" கூறுவதாக தலித் மக்கள் கொந்தளிப்புடன் கூறினர்.

"தெரு நாயைக் கூட தங்களது சாலையில் செல்ல அனுமதிக்கும் இந்த உயர் ஜாதிக்காரர்கள், எங்களது பிணத்தைஎடுத்துச் செல்லும்போது தடுப்பது ஏன்? விலங்குகளை விட நாங்கள் கேவலமாக போய் விட்டோமா?" என்றுகோபத்துடன் கேட்கிறார்கள் மேட்டுப்பட்டி கிராமத்து தலித் மக்கள்.

இதற்கு மேலும் பொறுமை காப்பதில் பலனில்லை என்று முடிவு செய்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 200 பேர், மாவட்டகலெக்டர் அதுல் ஆனந்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

அதில், தங்களுக்குரிய சமூக உரிமை மறுக்கப்படுகிறது. இந்த நிலை நீடித்தால் மதம் மாறுவதைத் தவிர எங்களுக்குவேறு வழியில்லை. எனவே மதம் மாறுவதற்கு கலெக்டர் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர்உத்தரவிட்டுள்ளார்.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X