லாட்டரி தடையை நீக்க கோரி திருச்சியில் பார்வையற்றோர் போராட்டம்
திருச்சி:
லாட்டரி விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரிநூற்றுக்கணக்கான பார்வையற்றவர்கள் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்நடத்தினர்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்குத் தடை விதித்து சமீபத்தில் அரசு உத்தரவிட்டது. அரசே நடத்தி வரும் லாட்டரிஉள்பட அனைத்து லாட்டரிகளையும் விற்பதற்குத் தடை விதித்தது அரசு. இந்தத் தடை உடனடியாக அமலுக்கும்வந்தது.
லாட்டரி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை லாட்டரி விற்பனையாளர்களும், ஏஜென்டுகளும் கடுமையாகஎதிர்த்தனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
ஆனால் மக்களின் நன்மைக்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இதை நீக்க உத்தரவிட முடியாது என்றுஉயர் நீதிமன்றம் கூறிவிட்டது.
இதற்கிடையே லாட்டரிச் சீட்டு விற்பனை முழுமையாக நின்று விட்டதால் தமிழகம் முழுவதும்லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரக்கணக்கான பார்வையற்றவர்களும் அடக்கம்.
பல பஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும், தெருக்களிலும் பார்வையற்றவர்கள் கைகளில் லாட்டரிச்சீட்டுக்களை வைத்துக் கொண்டு விற்று வந்ததை அனைவருமே பார்த்திருப்போம்.
குறிப்பாக திருச்சி பஸ் நிலையத்தில் நாள்தோறும் பல பார்வையற்ற நபர்கள் லாட்டரிச் சீட்டுக்களை விற்றுபிழைப்பு நடத்திக் கொண்டிருந்தனர். தற்போது லாட்டரி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து திருச்சியில் நூற்றுக்கணக்கான பார்வையற்றவர்கள் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தைநோக்கி ஊர்வலம் நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் அவர்கள் போராட்டம்நடத்தினர்.
லாட்டரி விற்பனை மீதான தடையை நீக்க வேண்டும் அல்லது எங்களுக்கு மாற்று வேலை வழங்குவதற்கு ஏற்பாடுசெய்ய வேண்டும் என்று பார்வையற்றவர்கள் கோரிக்கை விடுத்தனர். அரசு அவ்வாறு செய்யாவிட்டால் தாங்கள்பசி, பட்டினியால் வாடி சாகும் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர்.
போராட்டத்தின் முடிவில் திருச்சி மாவட்ட கலெக்டர் மணிவாசகத்திடம் அவர்கள் மனு ஒன்றையும் சமர்ப்பித்தனர்.
-->


