திமுக போக்கு: பா.ஜ.க. கடும் கண்டனம்
சென்னை:
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குபா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் பா.ஜ.கவின் தேசியப் பொதுச் செயலாளரான இல. கணேசன் நிருபர்களிடம்கூறுகையில்,
மத்திய அரசின் பொருளாதார, தாராளமய மற்றும் தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்து திமுக தீர்மானம்நிறைவேற்றியுள்ளது எங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.
இதுபோன்ற கொள்கைகளைச் செயல்படுத்தும்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்துகட்சிகளையும் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுப்போம்.
மேலும் திமுகவைச் சேர்ந்த முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் அமைச்சரவையில் உள்ளனர். அப்படிஇருந்தும் மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அப்படியே அவற்றை விமர்சிக்க திமுக விரும்பினாலும், பொது இடங்களில் வெளிப்படையாக அந்தக் கட்சிஇவ்வாறு பேசக் கூடாது. அதற்குரிய அமைப்பிடம்தான் கூறியிருக்க வேண்டும்.
மத்திய அரசைப் பொறுத்தவரை நாட்டு மக்களின் ஒட்டுமொத்த நலன்களையும் கருத்தில் கொண்டேதிட்டங்களும், கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன என்றார் இல. கணேசன்.
-->












Click it and Unblock the Notifications