தமிழக சட்டசபையில் மணி நாடாருக்கு இரங்கல்
சென்னை:
சமீபத்தில் மரணமடைந்த சாத்தான்குளம் எம்.எல்.ஏவான எஸ்.எஸ். மணி நாடாருக்கு இன்று தமிழக சட்டசபையில்இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் வரும் 28ம் தேதி வரை சபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.
தமிழக சட்டசபையின் பட்ஜெட்டுக்கு முந்தைய குறுகிய காலக் கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன்தொடங்கியது.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று காலை சட்டசபை மீண்டும் தொடங்கியது.
இன்றைய கூட்டத்தில், சமீபத்தில் காலமான மணி நாடாருக்கு இரங்கல் செலுத்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இது தொடர்பான தீர்மானத்தை சபாநாயகர் காளிமுத்து வாசித்தார். அவர் கூறுகையில்,
மணி நாடார் நலிந்த மக்களின் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டவர். அடக்கம், எளிமை, நல்ல பண்பு ஆகியவற்றில்சிறந்து விளங்கியவர். கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதி அவர் திடீரென்று மரணமடைந்தது இந்தச் சபையைஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றார் காளிமுத்து.
இதையடுத்து சமீபத்தில் காலமான முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் ஒன்பது எம்.எல்.ஏக்கள்ஆகியோருக்கும் சட்டசபையில் இரங்கல் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.
பின்னர் மணி நாடார் உள்பட மரணமடைந்த அனைவருக்கும் சட்டசபை உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் எழுந்துநின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் இன்றைய சட்டசபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சபையின் அடுத்த கூட்டம் மூன்று நாள்விடுமுறைக்குப் பின்னர் வரும் 28ம் தேதி நடைபெறும்.
-->


