For Daily Alerts
Just In
அமெரிக்காவில் இரு விமானங்கள் மோதல்: 4 பேர் பலி
கொலராடோ:
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் மீது பறந்து கொண்டிருந்த இரு சிறிய விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த விமானங்கள் விழுந்ததில் கீழே இருந்த பல வீடுகள் உடைந்தன. ஆனால், அந்த வீடுகளில் யாரும் இல்லாதததால் பெரியஅளவில் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.
டென்வர் நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இச் சம்பவம் நடந்தது.
விமானங்களின் சிதறல்கள் விழுந்ததில் பல வீடுகள் தீப் பிடித்துக் கொண்டன. இரு விமானங்களில் இருந்த தலா இரண்டு பேர்இறந்தனர். மேலும் ஒருவரது உடலும் சிதைவுகளில் கிடப்பதாகக் கூறப்படுகிறது.
கீழே வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
-->
Comments
Story first published: Saturday, January 25, 2003, 5:30 [IST]