For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழக சாலை விபத்தில் பெங்களூர் குடும்பம் பலி
கிருஷ்ணகிரி:
தமிழகத்தில் நடந்த சாலை விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரின் குடும்பமே பலியானது.
பெங்களூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் சந்திரசேகரன். இவரது சொந்த ஊர் கரூர். அங்கு நடந்த கோவில்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது தாயார், மனைவி, குழந்தையுடன் கரூருக்குச் சென்றிருந்தார்சந்திரசேகரன்.
பின்னர் மாருதி காரில் இவர்கள் பெங்களூர் திரும்பிக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணகிரி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி அந்த கார் மீது மோதியது. இதில் கார் தூக்கி ஏறியப்பட்டுநசுங்கியது. இதில் சந்திரசேகரன், அவரது தாயார், மனைவி, குழந்தை ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயேபரிதாபமாக உயிரிழந்தனர்.


