ஜே.வி.பியுடன் சந்திரிகா கூட்டணி: திடீர் தேர்தல் வரலாம்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் கூட்டணி சேர்ந்து பிரதமர் ரணிலின் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளில்அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஈடுபட்டுள்ளார்.
இதைச் சமாளிக்க திடீர் தேர்தல் நடத்த ரணில் முடிவு செய்துள்ளார்.
இப்போது முக்கிய எதிர்க் கட்சியாக உள்ள சந்திரிகாவின் மக்கள் கூட்டணிக் கட்சியும் சிங்கள இனவெறி கட்சியான ஜனதா விமுக்திபெரமுனாவும் கூட்டணி சேர்ந்தால் அரசுக்கு பெரும் பிரச்சகைளைத் தர முடியும். ஆட்சியையும் கூட கவிழ்க்க முடியும்.
2001ம் ஆண்டில் குறைந்த மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்தது ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி. ஆனால், தனதுஅணுகுமுறையால் நாடு முழுவதும் பெரும் ஆதரவைப் பெற்றுவிட்டார். இன்று தேர்தல் நடத்தினாலும் சந்திரிகாவின் கட்சியை மண் கவ்வச்செய்யும் பலத்தை அவர் அடைந்துவிட்டார்.
இந் நிலையில் தான் விடுதலைப் புலிகள் விஷயத்திலும் அமைதிப் பேச்சுவார்த்தைகளிலும் ரணிலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார் சந்திரிகா. இப்போது ஜே.வி.பியுடனும் கூட்டணி சேர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து திடீர் தேர்தல் நடத்தி சந்திரிகா ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க ரணில் முடிவு செய்திருப்பதாக அரசின் செய்தித்தொடர்பாளரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகிப்பவருமான பெரிஸ் தெரிவித்துள்ளார்.
எந்த நேரத்திலும் தேர்தலைச் சந்திக்கத் தயார் என்று கூறிய அவர் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இலங்கையின் ஒட்டு மொத்தஅரசியலையும் சந்திரிகாவுக்கு எதிராக மாற்றிவிட்டது என்றார்.
ரணில் அரசைக் கலைப்பேன் என சந்திரிகா அவ்வப்போது மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது. ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் கூட்டணிசேருவது குறித்து தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் பேசி முடித்துவிட்டார் சந்திரிகா.
அக் கட்சியுடன் சேர்ந்து மேலும் சில குட்டிக் கட்சிகளின் ஆதரவைத் திரட்டி ரணில் ஆட்சியைக் கவிழ்ப்பது அல்லது அடுத்த தேர்தலில்ஜனதா விமுக்தி பெரமுனாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவது என்ற முடிவுக்கு சந்திரிகா வந்துவிட்டார்.
இப்போதுள்ள நிலையில் 2007ம் ஆண்டு வரை ரணிலின் ஆட்சி இலங்கையில் நீடிக்க வேண்டும். சந்திரிகாவின் அதிபர் பதிவ 2005ம்ஆண்டில் காலியாகும். ஆனால், நாடாளுமன்றத்தை திடீரென கலைக்கவோ அல்லது கூட்டணி ஆட்சி மூலம் ரணிலைக் கவிழ்த்துவிட்டுமீண்டும் ஆட்சியைப் பிடிக்க சந்திரிகா திட்டமிட்டுள்ளார்.


