For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போக்குவரத்து ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றால் ரூ. 3.50 லட்சம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறையின் நிதிக் கழக ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான கருணைத் தொகைஅறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக ரூ. 3.50 லட்சம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கழகத்தில் 10 வருடம் பணி முடித்தவர்கள் அல்லது 40 வயதை எட்டியவர்கள், விருப்ப ஓய்வுக்குவிண்ணப்பிக்க தகுதி படைத்தவர்கள் ஆவர்.

ஏப்ரல் 16ம் தேதி வரை இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். முதலில் வருபவர்களுக்கு முதலில் என்றவகையில் விருப்ப ஓய்வு வழங்கப்படும்.

விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, பணியை முடித்த ஆண்டுகளுக்கு, வருடத்திற்கு 30 நாள் சம்பளம்,ஈட்டுப்படி உள்ளிட்டவையும் மீதமுள்ள பணிக்காலத்திற்கு, வருடத்திற்கு 10 நாள் சம்பளம், ஈட்டுப்படிஆகியவையும் கணக்கிட்டுத் தரப்படும்.

அதன்படி இந்த ஊழியர்களுக்கு அதிகபட்சம் ரூ. 3.50 லட்சம், குறைந்தபட்சம் ரூ. 1.75 லட்சம் கிடைக்கும்.

விருப்ப ஓய்வின்போது வழங்கப்படும் கருணைத் தொகை தவிர, வழக்கமான பிற பலன்களும் ஊழியர்களுக்குக்கிடைக்கும்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறையின் நிதி கழகத்திற்குசென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகியஇடங்களில் கிளைகள் உள்ளன.

இந்த நிறுவனம் மூலம் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 31,766 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தக் கழகத்தில் ஆட்களைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 22 பணியிடங்கள் கொண்டு வரப்பட்டுள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல துறைகளுக்கும், பல பணிகளுக்கும் விருப்ப ஓய்வுத் திட்டம் நீட்டிக்கப்படஉள்ளது.

விருப்ப ஓய்வு என்ற பெயரில் அரசே மறைமுக பல நெருக்குதல்கள் தந்து கட்டாய ஓய்வு கொடுத்து வருவதாகஅரசு ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X