இந்திய சாப்ட்வேர்களுக்கு வளைகுடா நாடுகளில் "மவுசு"
துபாய்:
இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் அடுத்த சில ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளான வளைகுடா நாடுகளில்பெருமளவில் முதலீடு செய்யவுள்ளன.
இந்தியாவிலிருந்து தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே பெருமளவிலானசாப்ட்வேர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவுக்கு 65 சதவீதமும், ஐரோப்பிய நாடுகளுக்கு 25 சதவீதமும் சாப்ட்வேர் ஏற்றுமதி நடக்கிறது.எஞ்சியுள்ள 10 சதவீத சாப்ட்வேர்கள் மட்டுமே மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் பார்வை தற்போது வளைகுடா நாடுகளை நோக்கித்திரும்பியுள்ளது.
வளைகுடா நாடுகளில் கடந்த ஆண்டு மட்டும் 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான சாப்ட்வேர்கள் ஏற்றுமதிசெய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்றுமதி வரும் 2008ம் ஆண்டில் 50 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கவுள்ளது.
சுமார் 250 இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் துபாயில் உள்ள வர்த்தக நிறுவனங்களுடன் இதற்கான ஒப்பந்தத்தைவிரைவில் செய்து கொள்ளவுள்ளன.
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவரான தீபக் புரி இந்தத்தகவல்களைத் தெரிவித்தார்.


