For Daily Alerts
Just In
கருணாநிதி மகன் கார் மோதி சிறுவன் படுகாயம்: டிரைவர் கைது
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசுவின் கார் மோதியதில் சைக்கிளில் சென்ற சிறுவன்படுகாயமடைந்தான்.
சென்னை-கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிலிருந்து டாடா சுமோ காரில் தமிழரசு கிளம்பினார்.
அப்போது வழியில் சைக்கிகளில் சென்ற சிறுவன் மீது கார் மோதியது. இதில் கீழே விழுந்த சிறுவனுக்கு தலை,வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த அடிபட்டு ரத்தக் காயம் ஏற்பட்டது.
ரத்தம் சொட்டச் சொட்டக் கீழே விழுந்த சிறுவனை அப்பகுதியில் இருந்தவர்கள் ராயப்பேட்டை அரசுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
சைக்கிள் சிறுவன் மீது மோதிய கார் அருகில் இருந்த வக்கீல் ஹரிகிருஷ்ணன் என்பவரது வீட்டு காம்பவுண்டு சுவர்மீது மோதி நின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.


