ரயிலிலிருந்து தனியே கழன்று ஓடிய என்ஜின்
மதுரை:
திருப்பதி-நாகர்கோவில் ரயிலின் என்ஜின் மதுரை அருகே திடீரென்று தனியாகக் கழன்று சென்று விட்டது.
திருப்பதியிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம்போல் கிளம்பியது.
நேற்று அதிகாலை சுமார் 2.50 மணிக்கு மதுரையை அடுத்த வாடிப்பட்டி அருகே இந்த ரயில் வந்துகொண்டிருந்தபோது, அதன் என்ஜின் மட்டும் மற்ற பெட்டிகளை விட்டு தனியாகக் கழன்று ஓடியது.
ஆனாலும் உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட அந்த ரயிலின் டிரைவர் அந்த என்ஜினை அவசர அவசரமாகநிறுத்தினார். அப்போது ரயில் மிக மிக மெதுவாகச் சென்று கொண்டிருந்ததால் எந்தவிதமான அசம்பாவிதமும்ஏற்படவில்லை.
என்ஜினுக்கும் அதற்கு அடுத்து இருந்த பெட்டிக்கும் இடையே உள்ள "கப்ளிங்" சரியாக மாட்டப்படாததால்தான்என்ஜின் தனியாகக் கழன்று ஓடியது தெரிய வந்தது.
பின்னர் அந்தப் பெட்டியுடன் என்ஜினை மீண்டும் சரியாகப் பொருத்திய பின்னர் ரயில் மீண்டும்நாகர்கோவிலுக்குக் கிளம்பிச் சென்றது.


