வாஜ்பாயை சந்தித்தார் நாயுடு- வி.எச்.பிக்கு எதிர்ப்பு
டெல்லி:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள நிலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத்திடம் தரும் மத்திய பா.ஜ.க.அரசின் முயற்சிகளுக்கு ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடும்எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
4 வட மாநிலங்களில் தேர்தல் வருவதால் ஓட்டு வாங்க வசதியாக வி.எச்.பி. மூலமாக அயோத்தி விவகாரத்தைபா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தைச் சுற்றியுள்ள நிலத்தைத் தர வேண்டும் என வி.எச்.பி. கெடுவிதித்தது. இதையடுத்து முடக்கி வைக்கப்பட்டுள்ள அந்த நிலத்தை வி.எச்.பியிடம் தரலாம் என்றரீதியில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு மனு போட்டது.
இதற்கு திமுக தலைவர் கருணாநிதி தான் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தார். அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத்தின்இறுதித் தீர்ப்பு வரும் வரை நிலத்தையும் யாரிடமும் தரக் கூடாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
மேலும் இதில் காஞ்சி சங்கராச்சாரியார் தலையிட்டு வி.எச்.பிக்கு ஆதரவான நிலை எடுத்து வருவதையும்கண்டித்திருந்தார்.
இந் நிலையில் மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரித்து வரும் பலமிக்க தலைவர்களில் ஒருவரான சந்திரபாபுநாயுடு இப் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார்.
அயோத்தி நிலம் தொடர்பான அலகாபாத் நீதிமன்ற வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை நிலத்தை வி.எச்.பி.,ராமஜென்ம பூமி அறக்கட்டளை ஆகியோரிடம் ஒப்படைக்கக் கூடாது என பிரதமர் வாஜ்பாயை நேரில் சந்தித்துநாயுடு கூறினார்.
இன்று டெல்லி சென்ற நாயுடு, பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது துணைப் பிரதமர் அத்வானி,மனிதவளத்துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி, நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங், தேசிய ஜனநாயகக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு ஆகியோர்உடனிருந்தனர்.
நாயுடு அவர்களைச் சந்தித்தபோது அவரை சமாதானப்படுத்த பிரதமர் உள்ளிட்டவர்கள் முயன்றனர். ஆனால்,அவர் இந்த விஷயத்தில் விட்டுத் தர முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இதனால் இச் சந்திப்பு காரசாரமாகவே இருந்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த சந்திப்புக்குப் பின்நிருபர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, பொருளாதார விஷயங்கள் குறித்து மட்டுமே பேசினோம் என்றார்.
ஆனால், பொருளாதார விஷயங்களைப் பேச முரளிமனோகர் ஜோஷியும் வெங்கைய்யா நாயுடுவும் எதற்கு என்றகேள்விக்கு அவர் பதிலளிக்காமல் போய்விட்டார்.
இச் சந்திப்புக்குப் பின் வெளியே வந்த மற்ற தலைவர்களும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
நாடாளுமன்றம் கூடுகிறது:
இதற்கிடையே அயோத்தி பரபரப்புக்கு இடையே நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை கூறுகிறது.ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி அப்துல் கலாம் மக்களவை, மாநிலங்களைவின் கூட்டுக் கூட்டத்தில்உரையாற்றி நாடாளுமன்றக் கூட்டத் தொடரை துவக்கி வைப்பார்.
மூன்று மாதங்கள் நடக்கும் இந்தக் கூட்டத் தொடரில் மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட்ஆகியவை தாக்கல் செய்யப்படும்.
ஆனால், அயோத்தி விவகாரத்தை எதிர்க் கட்சிகள் கையில் எடுக்கும் என்று தெரிகிறது. எதிர்க் கட்சிகள் தவிரஅதிருப்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மத்திய அரசு சந்திக்க வேண்டிவரும்.
அயோத்தயை வைத்து மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரவும் காங்கிரஸ்திட்டமிட்டுள்ளது. அதிருப்தியில் உள்ள திமுகவுடன் தெலுங்கு தேசமும் சேர்ந்தால் அரசு மண்ணைக் கவ்வும்.
இந்த விஷயம் குறித்தும் இன்று நாயுடுவுடன் பிரதமரும் துணைப் பிரதமர் அத்வானியும் பேசினர்.நாடாளுமன்றத்தில் எந்தச் சூழ்நிலையிலும் தங்களை கைவிட்டுவிட வேண்டாம் என நாயுடுவிடம் அவர்கள்கோரிக்கை வைத்தனர்.
4 மாநில தேர்தல்களை மனதில் கொண்டு பசு வதை தடுப்புச் சட்டத் கொண்டு வரவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.இதற்கு தெலுங்கு தேசத்தின் ஆதரவை பா.ஜ.க. தலைவர்கள் கோரினர். ஆனால், நாயுடு என்ன சொன்னார் என்றுதெரியவில்லை.


