கையில் பொருத்தப்பட்ட கால் விரல்கள்
கோவை:
விபத்தில் கை விரல்களை இழந்த இளைஞருக்கு அவருடைய கால் விரல்களையே பொருத்திகோயம்புத்தூர் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் 25ம் தேதி ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த தனபால் என்றஇளைஞருடைய வலது கை ஒரு இயந்திரத்தில் சிக்கிக் கொண்டு நசுங்கியது.
இதில் அவரது விரல்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. மறுபடியும் அவற்றை அறுவைச்சிகிச்சை மூலம் ஒட்டவைக்க முடியாத அளவுக்கு அவை கூழாகி விட்டன.
இதையடுத்து கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனைக்கு தனபால் கொண்டுவரப்பட்டார்.அவரது கையை ஆராய்ந்து பார்த்த டாக்டர்கள் அவருக்கு முதல்கட்ட சிகிச்சைகளைத் தொடங்கினர்.கையின் வேறு பகுதியிலிருந்து தோல் பகுதியை எடுத்து, வலது கையின் உள்ளங்கையில் பொருத்திதிசு இழப்பைத் தடுத்தனர்.
பின்னர் இடது காலின் கட்டை விரலை எடுத்து அதை வலது கையில் பொருத்தினர். இந்த அறுவைச்சிகிச்சைக்கு பல மணி நேரம் பிடித்தது. இது மிகவும் சிக்கலான அறுவைச் சிகிச்சையாகும்.
இருப்பினும் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. அதன் பின்னர் மேலும் ஒரு விரல்எடுக்கப்பட்டு கையில் பொருத்தப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சை கடந்த மூன்று மாதங்களுக்குமுன் நடந்தது.
கையில் பொருத்தப்பட்டுள்ள கால் கட்டை விரலும், இன்னொரு விரலும் தற்போது கையுடன் நன்குபொருந்தி விட்டதாகவும், ரத்த நாளங்கள் அவற்றுடன் சரியான முறையில் இணைந்துள்ளதாகவும்அறுவைச் சிகிச்சைக் குழுவின் தலைமை டாக்டர் ராஜாசபாபதி கூறினார்.
இதனால் தனபாலினால் விரல்களை நன்கு அசைக்க முடிகிறது. பொருட்களையும் எடுக்க முடிவதாகஅவர் தெரிவித்துள்ளார். கால் விரல்கள் எடுக்கப்பட்டதால் நடக்கும் போது லேசான அசெளகரியம்ஏற்படுகிறது என்றாலும் கூட அது பெரிய அளவில் அவரது இயல்பு வாழ்க்கைய பாதிக்காது எனடாக்டர் ராஜாசபாபதி கூறினார்.
மிகவும் கடினமான இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதால் டாக்டர்கள்மட்டுமின்றி தனபாலும் அதிக சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார்.


