For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்: அப்துல் கலாம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அயோத்தி விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என ஜனாதிபதிஅப்துல் கலாம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால்மக்களவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி கலாம் உரையாற்றி கூட்டத் தொடரை துவக்கிவைத்தார்.

வரும் 21ம் தேதிக்குள் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியைச் சுற்றியுள்ள நிலத்தை தங்களிடம் தர வேண்டும்என வி.எச்.பி. கெடு விதித்துள்ளது. இதையடுத்து இதனை வி.எச்.பியிடம் வழங்கும் வகையில் நிலத்தைவிடுவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

தேர்தலும் அயோத்தியும்:

இந்த வழக்கை விரைவில் நடத்தி நிலத்தை விடுவிக்கக் கோரியது. ஆனால், வி.எச்.பியின் நெருக்குதலுக்குஎல்லாம் பணிய முடியாது என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. வழக்கை 21ம் தேதிக்கு முன்னதாக எடுத்துக்கொள்ளவும் முடியாது என நீதிபதிகள் அறிவித்துவிட்டனர்.

இதனால், விரைவில் கூடவுள்ள சாதுக்கள் மாநாட்டில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் தேதியை முடிவுசெய்யப் போவதாக வி.எச்.பி. அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வருவதால் பா.ஜ.கவுக்குஉதவும் வகையிலேயே இந்த விவகாரத்தை இப்போது வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ் ஆகியவை கிளப்புவதாககாங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

நாடாளுமன்றத்தின் இந்த பட்ஜெட் கூட்டத் தொரில் பட்ஜெட்டை விட அயோத்தி விவகாரம் தான் அதிகமுக்கியத்துவம் பெறப் போகிறது. இதனால் தனது உரையிலேயே ஜனாதிபதி அப்துல் கலாம் இந்த விவகாரத்தைச்சுட்டிக் காட்டிப் பேசியுள்ளார்.

இன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் கலாம் கூறியதாவது:

அயோத்தி விவகாரத்தை நீதிமன்றம் விரைவில் விசாரித்து உரிய தீர்ப்பை வழங்க வேண்டும். நீதிமன்றம்சொல்லும் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும், அனைத்து அரசியல் கட்சிகளும் முழுமையாக ஏற்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து, நாட்டின் இறையாண்மையையும் அமைதியையும் காக்கஅனைத்துக் கட்சிகள், அனைத்து அமைப்புகள், சமூக சேவகர்கள் ஆகியோர் முயல வேண்டும்.

இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாவிட்டால் நீதிமன்றம் சொல்லும் தீர்ப்பு தான்இறுதியானது. அதை அனைத்துத் தரப்பினரும் ஏற்றாக வேண்டும்.

பாகிஸ்தான் தீவிரவாத பைத்தியம்:

இந்தியாவின் அமைதியைக் கெடுப்பதை பாகிஸ்தான் தனது முக்கிய வேலையாகவே வைத்துக் கொண்டுள்ளது.நாம் அமைதிக் கரத்தை நீட்டினாலும் இந்தியாவுடன் நட்புடன் வாழ அந் நாட்டுக்கு இஷ்டமில்லை.

வன்முறை, மத துவேஷம், தீவிரவாதம் என அனைத்து வகைககளிலும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொல்லை தந்துவருகிறது. பாகிஸ்தான் தூதரே தீவிரவாதிகளுக்குப் பணம் கொடுத்து வந்துள்ளார்.

எல்லைக்கு அப்பால் இருந்து தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தினால் மட்டுமே அந் நாட்டுடன்பேச்சு நடத்தப்படும். பெண்கள், அப்பாவிகள், குழந்தைகள், ராணுவத்தினரின் அப்பாவிக் குடும்பத்தினர் எனஅனைத்துத் தரப்பினரையும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொன்று வருவது அந் நாட்டுக்கு தீவிரவாத பைத்தியமேபிடித்துவிட்டதைத் தான் காட்டுகிறது.

வங்கதேச பிரச்சனை:

வங்க தேசத்தில் இருந்து சட்ட விரோதமாக மக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவது பல மாநிலங்களுக்கும்பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. வட-கிழக்குப் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளுக்கு வங்க தேசம் இடமும்ஆதரவும் தந்து வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுப் பிரிவு வங்கதேசத்தில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுவருகிறது. வங்க தேசத்துடனான விவகாரங்களுக்கு மத்திய அரசு முற்றுப் புள்ளி வைக்கும்.

இராக் போரை தவிர்க்க வேண்டும்:

இராக் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் ஐ.நாவின் அனுமதியுடன் தான் நடக்க வேண்டும்.

இராக் மீது போர் திணிக்கப்படக் கூடாது. இந்த விஷயத்தில் அமெரிக்காவின் செயலபாடு உலக நாடுகள் இடையேஏற்படுத்தியுள்ள வருத்தத்தை இந்தியாவும் பகிர்ந்து கொண்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் அமைதியைகுலைக்கும் எந்த முயற்சியையும் இந்தியா ஆதரிக்காது. ஐ.நா. சபை தான் இதில் எந்த முடிவையும் எடுக்கவேண்டும்.

பொருளாதார வளர்ச்சி:

10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் 8 சதவீத வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கு நிச்சயம்எட்டப்படும். இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் வரி விதிப்புகள் பெரிய அளவில் மாற்றிஅமைக்கப்படும்.

தேவையில்லாத செலவுகளைக் குறைத்து, வரி வசூலை தீவிரப்படுத்தினால் தான் நாட்டின் பொருளாதாரத்தைமுன்னேற்றிச் செல்ல முடியும்.

அணு ஆயுதங்கள், ஏவுகணைகள்:

நமது அணு ஆயுதங்களை யார் கட்டுப்பாட்டில் வைப்பது, அதைப் பயன்படுத்துவதற்கான உத்தரவிடும் அதிகாரமையங்கள் எவை ஆகிய விவகாரங்கள் தீர்க்கப்பட்டுவிட்டன. அதற்கான ஒரு கட்டமைப்புஅமைக்கப்பட்டுவிட்டது.

அக்னி-1 ஏவுகணையை மிக வெற்றிகரமாக உருவாக்கி ராணுத்திடம் வழங்கிய பாதுகாப்புத்துறைவிஞ்ஞானிகளைப் பாராட்டுகிறேன். மேலும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணையான பினாகா, ரஷ்யாவுடன்இணைந்துத் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை ஆகியவையும் வெற்றியடைந்துவிட்டன.

கொரிய பிரச்சனை:

வட கொரியாவில் ஏற்பட்டுள்ள பதற்றம் கவலை தருகிறது. பாகிஸ்தான் உதவியுடன் தான் அந் நாடு அணு ஆயுதஉற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இதில் கொரியாவை மட்டும் தண்டித்துவிட்டு பாகிஸ்தானை சும்மாவிட்டுவிடுவது அமெரிக்காவுக்கு அழகல்ல. இது அமெரிக்காவின் இரட்டை நிலையைத் தான் காட்டுகிறது.

வட- கிழக்கு பிரச்சனை:

நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் நிலவி வரும் தீவிரவாத பிரச்சனைகள் முடிவுக்கு வந்து கொண்டுள்ளதுமகிழ்ச்சி தருகிறது.

போடோ தீவிரவாத அமைப்புகள் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது நாகாலாந்து மக்களுக்கு பெரும்நிம்மதியைத் தந்துள்ளது. நாகாலாந்து மக்களின் ஆதரவில்லாமல் இதுபோன்ற ஒப்பந்தம் சாத்தியமேஆகியிருக்காது.

கலாச்சார மேம்பாடு:

நாட்டின் பெருமைக்குரிய கலாச்சார மையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குருஷேத்திரம்,ரெட்போர்ட், அஜந்தா, ஹம்பி, எல்லோரா, ஹுமாயூன் சமாதி ஆகியவை சீரமைக்கப்படும். சரஸ்வதி ஆற்றை ஒட்டிசுற்றுலா மையங்கள் கட்டப்படும்.

குருஷேத்திரத்தில் இனி ஆண்டுதோறும் மகாபாரத விழா நடத்தப்படும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஅனைத்து பனை ஓலைகளையும் பாதுகாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேபிள் டிவி:

நாடு முழுவதும் கேபிள் டிவியை முறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும். உபயோகிப்பாளர்களுக்கு அதிகநன்மை கிடைக்கும் வகையில் இச் சட்டம் இருக்கும். முதலில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தாவில்கண்டிசனல் அக்ஸஸ் சிஸ்டம் முறை அமலாக்கப்படும். பின்னர் இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

அந்தந்தப் பகுதிகளில் சிறிய ரேடியோ நிலையங்கள் அமைத்துக் கொள்ளவும், பல்கலைக்கழகங்கள் போன்றஇடங்களில் கேம்பஸ் ரேடியோ அமைத்து ஒலிபரப்பவும் அனுமதி தரப்பட உள்ளது.

மின்சார சேமிப்பு:

மின் உற்பத்தித் திட்டங்கள் பலவும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் மின்சாரம்வீணாக்கப்படுவதைத் தடுக்கவும் முயற்சி செய்ய வேண்டும். முதல்கட்டமாக ஜனாதிபதி மாளிகையிலும் பிரதமர்இல்லத்திலும் 30 சதவீத மின்சார உபயோகத்தைக் குறைத்துக் காட்டியுள்ளோம். பிறரும் இதைத் செய்ய வேண்டும்.

கல்பனா சாவ்லாவுக்கு அஞ்சலி:

இந்தியாவின் இளம் தலைமுறையினருக்கு ஒரு மாடலாக விளங்கிய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின்மறைவு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஹரியாணாவில் சிறிய ஊரில் பிறந்த ஒரு பெண் செய்த மிகப் பெரியசாதனை அது. அது ஒரு நெடிய பயணம். கொலம்பியா விண்வெளி ஓடத்தில் பலியான அந்த விண்வெளிவீராங்கனைக்கு தலைவணங்கி அஞ்சலி செலுத்துகிறேன். நமக்கு அவர் எப்போதும் ஒரு உந்து சக்தியாக இருந்துகொண்டே தான் இருக்கப் போகிறார்.

அமெரிக்க உறவு:

அமெரிக்க - இந்திய உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளது. அடுத்தபடியாக பாதுகாப்புத்துறையில் இரு நாடுகளும்இணைந்து செயல்படப் போகின்றன. ஆப்கானிஸ்தானில் பழமைவாதிகளை முறியடித்து ஜனநாயகத்தை மலரச்செய்வதில் அமெரிக்காவுடன் இந்தியா தொடர்ந்து இணைந்து பணியாற்றும்.

காஷ்மிரில் முதல் ரயில்:

2007ம் ஆண்டில் காஷ்மீரில் முதல் ரயில் இயங்கத் தொடஙகிவிடும். அதற்கான பணிகள் ஆரம்பித்துவிட்டன.இதற்க்க ரூ. 3,500 கோடியை ஒதுக்கியுள்ளோம். உதம்பூரில் இருந்து பாரமுல்லா வரை இந்த ரயில் செல்லும்.

கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து:

தென் ஆப்பிரிக்காவில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடி வரும் இந்திய அணிக்கு இந்தியநாடாளுமன்றம் மற்றும் மக்களின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அப்துல் கலாம் கூறினார். இந்தியக் கிரிக்கெட் அணியினரை அவர் வாழ்த்திப் பேசியபோதுநாடாளுமன்றத்தில் பெரும் சிரிப்பலை எழுந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அவர்கள் தொடர்ந்துமோசமாக விளையாடி வருவதால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை ஜனாதிபதி உடல்நலக் குறைவு:

அப்துல் கலாமின் இந்த உரையை துணை ஜனாதிபதி பைரோன்சிங் செகாவத் இந்தியில் உரையாற்ற எழுந்தார்.ஆனால், உடல் நலக் குறைவால் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்.

இதையடுத்து பாதியிலேயே தனது உரையை முடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X