சாத்தான்குளம்: அதிமுக பிரச்சாரத்தில் கதி கலங்கும் காங்கிரஸ்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் இடைத் தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம்உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
அதிமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே இங்கு நேரடிப் போட்டி நிலவுவதால் அந்த இருகட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தனது ஐந்து நாள் பிரச்சாரத்தை ஆறு நாட்களாக அதிகரித்துள்ள ஜெயலலிதா, நேற்று ஓய்வுஎடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து இன்று மாலை மீண்டும் தன் தேர்தல் பிரச்சாரத்தைத்தொடர்கிறார். அதிமுக தனது சகல பலத்தையும் பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருகிறது.
தங்களுக்கு நிலைமை சாதமாக இல்லை என்றாலும் அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுபிரச்சாரம் செய்து வருகிறார் ஜெயலலிதா. அவர் காட்டி வரும் தீவிரமும் வேகமும் காங்கிரசாரைஅச்சத்தில் ஆழ்த்தியுள்ளது நிஜம்.
மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்க்கும் கிருஸ்துவ மக்களின் ஓட்டு இருக்கும் தைரியத்தில்காங்கிரஸ் சொதப்பல் பிரச்சாரத்தையே தொடர்ந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் பிரபு- கார்த்திக்மாதிரி ஜி.கே. வாசனும் இளங்கோவனும் ஆளுக்கு ஒரு மூலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வாசன் ஆதரவாளர்கள் இளங்கோவன் தரப்பு கூட்டங்களுக்கு வருவதேயில்லை. இளங்கோவன்ஆட்கள் திமுகவினரைத் தான் அதிகம் நம்புகின்றனர்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மகேந்திரன், வாசன் கோஷ்டிக்காரர் என்பதால் இவரைக் கூடஇளங்கோவன் தரப்பில் மதிப்பதில்லை. மக்களிடம் கை சின்னத்துக்கு வாக்கு கேட்கும்இளங்கோவன், மகேந்திரன் பெயரை சொல்வதையே தவிர்க்கிறார்.
அதிமுக தரப்பில் கோடிக்கணக்கில் பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ்வேட்பாளர் மகேந்திரன் வட்டிக்கு காசு வாங்கி தான் பிரச்சாரம் செய்து வந்தார்.
அவருக்கு சத்தியமூர்த்தி பவனில் இருந்து ரொம்ப கொஞ்சமே பணம் வந்தது. டெல்லியில் இருந்துசுத்தமாக பணம் வரவில்லை. இதனால் வாசனைத் தான் கடவுள் மாதிரி நம்பியிருக்கிறார்மகேந்திரன். தொகுதிக்கு வாசன் வந்த பிறகு தான் அவர் முகத்தில் மகிழ்ச்சியையே காண முடிந்தது.
இந் நிலையில் சாத்தான்குளம் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருந்து ஜெ. ஆதரவாளரான காங்கிரஸ்முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலுவுக்கு டெல்லியில் இருந்து டோஸ் வந்ததையடுத்துதொகுதிக்கு ஓடி வந்திருக்கிறார்.
இவர் வாசன், இளங்கோவன் ஆகிய இருவரையும் தவிர்த்துவிட்டு தனியே பிரச்சாரம் செய்வாராம்.
இந் நிலையில் திமுகவினர் பலரையும் காசு கொடுத்து அதிமுகவினர் வளைத்து வருவதாகஅறிவாலயத்துக்கு தகவல் வந்துள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மூலம்திமுகவினருக்கு எச்சரிக்கை பறந்துள்ளது.
இங்கு ஸ்டாலின், பரிதி இளம்வழுதி தலைமையில் நடக்கவுள்ள திமுக பொதுக் கூட்டத்தைகாங்கிரஸ் பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.


