டெட்டனேட்டர் குண்டு வெடித்தது: மதுரையில் பெரும் பரபரப்பு
மதுரை:
மதுரையில் குப்பை மேட்டில் கிடந்த டெட்டனேட்டர் வகை வெடிகுண்டு வெடித்ததில் ஒரு பெண்படுகாயமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாநராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் பெண் அம்மாபொண்ணு.இதைத் தவிர குப்பைகளில் கிடக்கும் வயர், பேப்பர் ஆகியவற்றைப் பொறுக்கி விற்கும் பணியிலும்அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு மதுரை-புதூரில் ஒரு குப்பை மேட்டில் கிடந்த ஒரு வயரைஅம்மாபொண்ணு பிடுங்கி இழுக்க முயற்சித்தார்.
அப்போது அந்த வயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அம்மாபொண்ணு அலறியபடிரத்த வெள்ளத்தில் மயங்கிச் சாய்ந்தார்.
குண்டு வெடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த அம்மாபொண்ணுவை அவர்கள் உடனடியாகமருத்துவமனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே போலீசாரும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போதுதான் அந்த வயர் ஒரு டெட்டனேட்டர் ரக வெடிகுண்டுக்கு உரியது என்பது தெரியவந்தது.
குப்பையில் டெட்டனேட்டர் குண்டு எப்படி வந்தது, யார் அதைப் போட்டிருப்பார்கள் என்பதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
குப்பை மேட்டில் குண்டு வெடித்த சம்பவம் புதூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
ஜி.எச்சில் முதியவர் தீக்குளிப்பு:
இதற்கிடையே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 75 வயதுமுதியவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
காரைக்குடியைச் சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மருத்துவமனையிலேயே திடீரென மண்ணெண்ணெய் தன் உடம்பில் ஊற்றி தீவைத்துக் கொண்டார் சண்முகம்.
முக்கால்வாசிக்கும் மேல் உடம்பு கருகிய நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இருப்பினும் 80 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் உயிர் பிழைப்பதுகடினம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சைக்காக வந்தவர் தீக்குளித்தது மதுரை அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.


