பாண்டிச்சேரியில் அரவிந்த் கண் மருத்துவமனை: கலாம் திறந்து வைத்தார்
பாண்டிச்சேரியில்:
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட புகழ்பெற்ற அரவிந்த் கண் மருத்துவமனையின்பாண்டிச்சேரி கிளையை ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் இன்று திறந்து வைத்தார்.
இந்திய விமானப் படையின் தனி விமானத்தில் நேற்று இரவு சென்னை வந்த டாக்டர் கலாமைதமிழக ஆளுநர் ராமமோகன் ராவ், தமிழக அரசின் சார்பாக நிதி அமைச்சர் பொன்னையன்,தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், டி.ஜி.பி. ராஜகோபாலன் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற டாக்டர் கலாம் அங்கேயே நேற்று இரவு தங்கினார்.
அயோத்தி விவகாரம் உச்ச நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அந்த நிலத்தை வி.எச்.பியிடம் தரஅனுமதிக்கக் கோரியும் அந்த இடத்தில் பூஜைகள் நடத்த விதிக்கப்பட்ட இடைக் காலத் தடையைநீக்கக் கோரியும் ஒரு மனுவை பா.ஜ.க. அரசு தாக்கல் செய்தது. மேலும் இந்த மனுவை பிப்ரவரி21ம் (இன்றுக்குள்) தேதிக்குள் விசாரிக்குமாறும் கோரியது.
பின்னர் பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்த டாக்டர் கலாமை அம்மாநில துணை நிலை ஆளுநர்மல்கானி, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் பாண்டிச்சேரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரவிந்த் கண் மருத்துவமனையைத் திறந்துவைத்தார் டாக்டர் கலாம். பின்னர் அவர் பேசுகையில்,
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு ரூ.3,000 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலை மாற வேண்டும். இதுபோன்ற மருத்துவ உபகரணங்களை நம் நாட்டிலேயே தயாரிக்கவேண்டும்.
மேலும் ஏழை மக்களும் எளிதில் சிறப்பான சிகிச்சை பெறும் வகையில் மருத்துவமனைகளில்சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றார் டாக்டர் கலாம்.
பின்னர் வழக்கம்போல் பாண்டிச்சேரியைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளுடன் டாக்டர் கலாம்கலந்துரையாடினார்.
இதையடுத்து இன்று பிற்பகலுக்கு மேல் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரிலும் பல்வேறுநிகழ்ச்சிகளில் டாக்டர் கலாம் கலந்து கொள்கிறார்.
பின்னர் இன்று இரவே கோயம்புத்தூரிலிருந்து விமானப் படையின் தனி விமானம் மூலம்டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.


