திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்றங்களுக்கு ஜனாதிபதி அனுமதி மறுப்பு: ஜெ. வழக்குகள் என்னவாகும்?
டெல்லி:
கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த திமுக ஆட்சியில் தனி நீதிமன்றங்கள்அமைக்கப்பட்டன. ஆனால், இந்த தனி நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக திமுக அரசு அனுப்பியதீர்மானத்தை ஜனாதிபதி அப்துல் கலாம் இப்போது திருப்பி அனுப்பியுள்ளார்.
இதனால் இந்த தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதும், அதில் நடந்த விசாரணைகளும் செல்லாமல் போகுமோஎன்ற புதிய பிரச்சனை தோன்றியுள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடந்தன. டான்சியில்தொடங்கி சுடுகாடு வரை ஊழல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டன. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக இதுதொடர்பாக விசாரணை நடத்த தனிக் கோர்ட்டுகளை அமைக்க முடிவு செய்தது.
இதற்கான தீர்மானம் 1997ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத்தில் திமுக அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்தத்தீர்மானத்தை சட்டமாக்க வேண்டுமானால் ஜனாதிபதியின் ஒப்புதல் வேண்டும். இதனால் இந்தத் தீர்மானத்தைஜனாதிபதியின் ஒப்புதலுக்காக சட்டத்துறை அனுப்பி வைத்தது.
ஆனால், அப்போது ஜனாதிபதியாக இருந்த கே.ஆர். நாராயணன் உடனே இதற்கு ஒப்புதல் தரவில்லை. சிலவாரங்கள் காத்திருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி அந்த ஒப்புதல் இல்லாமலேயே தனி நீதிமன்றங்களைஅமைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து மே மாதம் 3 தனி நீதிமன்றங்கள்அமைக்கப்பட்டன. அவற்றுக்கான நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. ஜெயலலிதா, சசிகலா, சசிகலாவின் உறவினர்கள், சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா,அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவர் மீதும் மொத்தம் 46 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் ஜெயலலிதா மீது டான்சி, கலர் டிவி வழக்கு, பிளசன்ட் ஸ்டே, சொத்து சேர்த்தது என 7 வழக்குகள்பதிவாயின. பதிவான 46 வழக்குகளும் 3 தனி நீதிமன்றங்களுக்கும் பிரித்துத் தரப்பட்டன. ஆனால், தனிநீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதை எதிர்த்து அதிமுகவினர் வழக்குத் தொடர்ந்தனர். அவை அனைத்தும்தள்ளுபடியாயின.
அதே போல அப்போதைய பிரதமர் நரசிம்மராவுடன் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி இந்த நீதிமன்றங்கள்அமைக்கப்பட்டது செல்லாது என மத்திய அரசிடம் இருந்து உத்தரவை பிறப்பிக்கச் செய்தார் ஜெயலலிதா. ஆனால்,அதையும் நீதிமன்றங்கள் ரத்து செய்தன.
கிட்டத்தட்ட திமுக ஆட்சி முழுவதும் நடந்த விசாரணைகளில் 25 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டன. இதில்ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது தனி நீதிமன்றம். மிச்சமுள்ள 21வழக்குகள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்த தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக கே.ஆர்.நாராயணன் காலத்தில்கொடுக்கப்பட்ட தமிழக அரசின் தீர்மானம் அவரது பதவிக் காலம் முடியும் வரை அப்படியே ஜனாதிபதி மாளிகைபைல்களில் குவிந்து கிடந்தது. இந்த விஷயத்தில் நாராயணன் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார்.
இப்போது இந்த தீர்மானத்தை ஏற்க மறுத்து ஜனாதிபதி அப்துல் கலாம் உத்தரவிட்டுள்ளார். திமுக ஆட்சியில்சட்டத்துறை அனுப்பிய தீர்மானத்தை திரும்பவும் தமிழக சட்டத் துறைக்கே அனுப்பியிருக்கிறார் அப்துல் கலாம்.கடந்த 9ம் தேதி இது தொடர்பான கோப்பு தமிழகத்துக்குத் திரும்பி வந்துவிட்டது.
ஆனால், இந்த விவரம் இப்போது தான் வெளியில் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியின் ஒப்புதல் இல்லாமல் அமைக்கப்பட்டதால் இந்த தனி நீதிமன்றங்களே செல்லாமல் போய்விடுமா?இதில் நடந்த விசாரணைகள், தரப்பட்ட தண்டனைகள் அனைத்தும் ரத்தாகிவிடுமோ என்ற கேள்விகள்எழுந்துள்ளன.
இது தொடர்பாக மாநில சட்டத்துறை தான் முடிவெடுக்கும் என்று தெரிகிறது. சட்ட நிபுணர்களும் தமிழக அரசு தீவிரஆலோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டவை தனி நீதிமன்றங்களே அல்ல. அவை கூடுதல் நீதிமன்றங்கள்தான் என்று சில வழக்கறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதுசெல்லாது என்று யாரும் கூற முடியாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்ற சிக்கல் வரலாம் என்று தெரிந்து தான் சென்னை செசன்ஸ் நீதிமன்றங்களின் கூடுதல் நீதிமன்றங்களாகஇதனை கருணாநிதி உருவாக்கினார். ஏற்கனவே உள்ள செசன்ஸ் நீதிமன்றங்களையும் கணக்கில் கொண்டு 11வதுநீதிமன்றம், 12வது நீதிமன்றம், 13வது நீதிமன்றம் என்று தான் இந்த 3 நீதிமன்றங்களும் அறிவிக்கப்பட்டன.
ஆனால், பெயருக்குத் தான் அவரை தனி நீதிமன்றஙகளாகக் குறிப்பிடப்பட்டன. ஆவணங்களில் கூடுதல் செசன்ஸ்நீதிமன்றங்களாகவே இவை உள்ளன என்கின்றனர் இந்த வழக்கறிஞர்கள்.
இதனால் தனி நீதிமன்றத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரவில்லை என்று சொல்லி இந்த நீதிமன்றங்களை அதிமுகஆட்சியால் எதுவும் செய்துவிட முடியாது என்கின்றனர்.
ஒரே குழப்பம் நிலவுகிறது.


