காங். வேட்பாளரை தாக்கவில்லை: அமைச்சர் மறுப்பு
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் காங்கிரஸ் வேட்பாளரான மகேந்திரன் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தஇடத்திலேயே நான் அப்போது இல்லை என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
மகேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்களை அனிதா ராதாகிருஷ்ணனும், அதிமுகவினரும்,வேறு சில ரெளடிகளும் நேற்று அடித்து உதைத்ததைத் தொடர்ந்து அந்நகர் முழுவதும் நேற்றுபதற்றம் ஏற்பட்டது.
ஆனால் மகேந்திரனை நான் தாக்கவே இல்லை என்று அனிதா ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
சாத்தான்குளத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியதிலிருந்தே காங்கிரசார் தேவையில்லாதபிரச்சனைகளை ஏற்படுத்தி, போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த இடைத் தேர்தலில்எப்படியும் தோற்றுப் போய் விடுவோம் என்று பயந்து கொண்டு இப்போதே அதற்கானகாரணங்களையும் காங்கிரசார் தேடி வருகின்றனர்.
அதன்படிதான் நேற்று நான் மகேந்திரனைத் தாக்கியதாகவும் காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றனர்.உண்மையைச் சொல்லப் போனால் நேற்று நான் அந்த இடத்திலேயே இல்லை.
மேலும் அப்பகுதியில் துணை சபாநாயகரான வரகூர் அருணாசலம் சென்ற காரை காங்கிரசார்வழிமறித்து கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் காருக்குள் அமர்ந்திருந்த அருணாசலமும், அதிமுக எம்.எல்.ஏவான சரோஜாவும்ரத்தக் காயம் அடைந்துள்ளனர். மேலும் காரின் கண்ணாடிகளும் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளதுஎன்றார் அனிதா ராதாகிருஷ்ணன்.


