ஞாபகமில்லை.. தெரியாது.. நினைவில்லை..: நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி. சுதாகரன் சாட்சியம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலா குடும்பத்தினரும் வருமானத்தையும் மீறி ரூ. 66 கோடிக்குசொத்து சேர்த்தது தொடர்பான வழக்கில் இன்று சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று தனி நீதிமன்றத்தில்நேரில் ஆஜராகி சாட்சியமளித்தனர்.
நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் தெரியாது, விளக்கம் தெரியாது என்றரீதியில் சொல்லி வைத்ததுமாதிரி மூவரும் பதிலளித்தனர்.
முன்னதாக மிக மகிழ்ச்சியாக அட்டகாசமான காரில் சசியும், இளவரசியும் வந்திறங்கினர். அவர்களை மிகபவ்யமாக கும்பிட்டு அதிமுகவினர் வரவேற்றனர். அடுத்த காரில் கூலிங் கிளாஸ் சகிதமாக வந்தார் வளர்ப்புமகனான சின்ன எம்.ஜி.ஆர். சுதாகரன். அங்கிருந்த போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு,அதிமுகவினரின் பவ்யத்தை ஏற்றுக் கொண்டு நீதிமன்றத்துக்குள் சென்றார்.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் பல சாட்சிகள் பல்டி அடித்துவிட்டன. ஆனால், விசாரணை நடத்தியஅதிகாரியான நல்லம்ம நாயுடு தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு எதிராக தனது சாட்சியத்தை அளித்தார். தனதுஉயிருக்குக் கூட ஆபத்து இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் தனது நிலையில் இருந்து மாறவேயில்லை.
இந் நிலையில் இவர்கள் மூவரும் நேரில் ஆஜராகி சாட்சியமளித்தனர். ஜெயலலிதாவும் இன்று நீதிமன்றம்வந்திருக்க வேண்டும். ஆனால், தனக்கு காய்ச்சல் இருப்பதால் தனக்குப் பதிலாக வழக்கறிஞர் சாட்சியளிக்கஅனுமதி கோரி மனு போட்டார் ஜெயலலிதா. இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால் அவர் நேரில் வர வேண்டியஅவசியம் எழவில்லை.
நீதிபதி ராஜமாணிக்கம் முன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் நடந்தவிசாரணை:
நீதிபதி: போயஸ் கார்டனில் முன்பு வேலை பார்த்த ராஜாராம் என்பவர் இங்கு சாட்சியளித்தார். அப்போது போயஸ்கார்டனில் தனக்குச் சொந்தமான 3,800 சதுர அடி நிலத்தை ஜெயலலிதாவுக்கு ரூ. 8 லட்சத்துக்கு விற்றதாகக்கூறினார். இது குறித்து உங்களுக்கு என்ன விவரம் தெரியும்?
சசிகலா: தெரியாது
இளவரசி: தெரியாது
வளர்ப்பு மகன் சுதாகரன்: தெரியாது
நீதிபதி: பதிவாளர் தங்கவேல் சாட்சியளித்தபோது ஜெயா பப்ளிகேசன்ஸ் நிறுவனம் இதயம் பேசுகிறதுபப்ளிகேசனை வாங்கியதாகவும். அதில் ஜெயலலிதா, சசிகலா பங்குதாரர்கள் என்றும், இருவரும் இணைந்துடான்சி நிலத்தை வாங்கியதாகவும் கூறியிருக்கிறாரே?
சசிகலா: இந்த விஷயத்தில் விரிவான விளக்கம் வேண்டும். அப்போது தான் பதில் சொல்ல முடியும்.
இளவரசி: விரிவான விளக்கம் வேண்டும்.
சுதாகரன்: விளக்கம் வேண்டும்.
இதே போல மூவரும் எந்த விளக்கமும் சொல்லாமல் ஒரே மாதிரியாக பல கேள்விகளுக்கு பதில் தந்தனர். ஆனால்,சுதாகரன் பலரிடம் இருந்து வாங்கிய சொத்துக்கள் குறித்த கேள்விகள் கேட்டபோது மட்டும், சொத்துக்கள்வாங்கியதை சுதாகரன் ஒப்புக் கொண்டார் (இவை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால்...).
54 சென்ட் நிலம், திருமண மண்டபம் ஆகியவற்றை வாங்கியதை சுதாகரன் ஒப்புக் கொண்டார். (இவருக்கு என்றுவருமானம் ஏதும் கிடையாது என்பது தான் வழக்கு).
கங்கை அமரனின் பையனூர் தோட்டத்தை ஏன் வாங்கினீர்கள் என்று நீதிபதி கேட்டபோது, அவருக்கு படம்எடுத்ததில் நஷ்டம். இதனால் விற்றார், நாங்கள் வாங்கினோம் என சசிகலா பதிலளித்தார். (இந்தச் சொத்தை கங்கைஅமரனை மிரட்டி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் ரூ. 1.25 கோடி மதிப்புள்ள அந்த சொத்தைசுதாகரன் வெறும் ரூ. 15 லட்சம் கொடுத்து சுருட்டியதாகவும் திமுக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.)
இவர்களிடம் நீதிபதி ராஜமாணிக்கம் மொத்தம் 299 கேள்விகளைக் கேட்டார். அவற்றில்பெரும்பாலானவற்றுக்கு நினைவில்லை, தெரியாது என்ற ரீதியிலேயே பதில் சொல்லிவிட்டுச் சென்றனர்.
இந்தக் கேள்விகள் ஜெயலலிதாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 5 மணிக்குள் தன்வழக்கறிஞர் மூலம் அவர் தன்னுடைய பதில்களை அளிக்க வேண்டும் என்று நீதிபதி ராஜமாணிக்கம்உத்தரவிட்டுள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிமதிப்புள்ள சொத்துக்களைச் சேர்த்ததாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நல்லம்மநாயுடுவையும் சேர்த்து இதுவரை மொத்தம் 259 பேர் இவ்வழக்கில் சாட்சிஅளித்துள்ளனர்.


