விழுப்புரம் அருகே கோஷ்டி மோதல்: 2 பேர் வெட்டிக் கொலை
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலைத் தொடர்ந்து 2 பேர்வெட்டிக் கொல்லப்பட்டனர்.
விழுப்புரத்தை அடுத்த கண்டம்பள்ளம் காலனி என்ற இடத்தில் சில மாதங்களுக்கு முன் பழனிஎன்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தப் படுகொலை தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் அடிக்கடி கத்தி, அரிவாள், வேல், ஈட்டி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்றும் இந்த இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
இதில் ஒரு கோஷ்டியைச் சேர்ந்த சிலர் பயங்கரமான ஆயுதங்களுடன் எதிர் கோஷ்டியைச் சேர்ந்தஒருவரின் வீட்டுக்குள் புகுந்து சராமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.
இந்தச் சம்பவத்தில் ஒரு பெண் உள்பட மூன்று பேருக்கு பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.தாக்கியவர்கள் பின்னர் அந்த வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.
இதையடுத்து வெட்டுக் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூன்றுபேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனளிக்காமல்பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த பெண் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே கண்டம்பள்ளம் காலனியில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அங்கு போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.


