For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: சிவாஜி மகன் ராம்குமார் சாட்சியம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சுதாகரனின் திருமணச் செலவை நாங்கள்தான் செய்தோம் என்று மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் மூத்த மகனான ராம்குமார் இன்று தனி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா,சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் கடந்த மூன்று நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம்அளித்து வருகின்றனர்.

இது தொடர்பான விசாரணையிலிருந்து ஜெயலலிதா விலக்கு பெற்று தன் வக்கீல் மூலமாகவேநீதிபதி ராஜமாணிக்கத்தின் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.

இந்நிலையில் சுதாகரனின் திருமணச் செலவுகள் தொடர்பாக இன்று ராம்குமார் நீதிமன்றத்தில்ஆஜராகி சாட்சியம் அளித்தார். சிவாஜியின் பேத்தி சத்தியலட்சுமியைத்தான் சுதாகரன் திருமணம்செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.

இன்று காலை 10.30 மணியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ராம்குமார் சாட்சியம் அளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,

என்னுடைய அக்கா சாந்தியின் மகள் சத்தியலட்சுமிக்கும் சுதாகரனுக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டது. பெண் வீட்டார் என்ற முறையில் திருமணச் செலவுகளை நாங்கள்தான்செய்தோம்.

இந்தத் திருமணத்திற்கு ரூ.92 லட்சம் செலவானது. எங்களுடைய சிவாஜி பிலிம்ஸ் உள்ளிட்டநிறுவனங்கள் மூலம் சம்பாதித்த ரூ.92 லட்சத்தை சென்னை-கோபாலபுரத்தில் உள்ள இந்திய ஸ்டேட்வங்கியில்தான் டெபாசிட் செய்திருந்தோம்.

அந்தப் பணம் முழுவதையும் இந்தத் திருமணத்திற்காக செலவழித்தோம். அந்தச் செலவை வேறுயாரோ செய்ததாகக் கூறினால் அது தவறு என்றார் ராம்குமார்.

இந்நிலையில் சுதாகரனின் வக்கீலான சுதந்திரம் ராம்குமாரை குறுக்கு விசாரணை செய்தார்.அப்போது, "என்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் மூன்று முறை விசாரித்துள்ளனர். இப்போது நான்நீதிமன்றத்தில் கூறிய அதே தகவல்களைத்தான் அப்போதும் அவர்களிடம் நான் கூறினேன்.இதற்கான வங்கி ஆதாரம் ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார்ராம்குமார்.

இதையடுத்து ஜெயலலிதாவின் ஆடிட்டரான நடராஜனும் இன்று சாட்சியம் அளித்தார். அவர்கூறுகையில்,

ஜெயலலிதாவுக்கு விவசாயம் மூலம் நல்ல வருவாய் வந்து கொண்டிருந்தது. ஹைதராபாத்தில்அவருக்கு 14 ஏக்கர் திராட்சைத் தோட்டம் உள்ளது.

அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வருவாய் வந்தது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இதன் மூலம்ரூ.51 லட்சம் வந்தது.

மேலும் ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீடுகள் மூலமும் ரூ.3.6 லட்சம் வாடகையாகவந்துள்ளது. இவற்றைத் தவிர நடிகையாக இருந்து சம்பாதித்த ரூ.68.94 லட்சமும் அவருடையசேமிப்பாகத்தான் இருந்து வந்தது என்றார் நடராஜன்

நேற்றைய விசாரணை:

முன்னதாக நேற்று நீதிபதி ராஜமாணிக்கம் கேட்ட கேள்விகளுக்கு சசிகலா தொடர்ந்து பதிலளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,

இவ்வழக்கில் தங்க கடிகாரங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன. என்னுடையகைக்கடிகாரங்களும் இதில் உள்ளன. ஆனால் அவற்றின் மதிப்பு மிகவும் அதிகமாகக்காண்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஒற்றைச் செருப்பின் விலை ரூ.900 என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றைச் செருப்புக்கெல்லாம்எங்காவது விலை மதிப்பிடுவார்களா? இது அப்பட்டமான பொய். மேலும் மதிப்பீடு செய்யும்போதுஎன்னிடம் எந்தச் செருப்பையும் காட்டவில்லை.

சோதனையின்போது என்னுடைய சகோதரியோ, நானோ வீட்டில் இல்லை. இதைப் பயன்படுத்திக்கொண்டு வெளியில் இருந்தே சேலைகளை அதிக அளவில் கொண்டு வந்து அதிக எண்ணிக்கையைசிலர் காட்டியுள்ளனர். அவ்வளவு சேலைகளை வைப்பதற்கு அங்கு இடமே கிடையாது.

இவ்வழக்கு தொடர்பான வீடுகளும், சொத்துக்களும் வேறு எங்கோ வீடியோ படமாகஎடுக்கப்பட்டுள்ளன. அதில் காணப்படும் பொருட்கள் எங்கள் வீட்டில் கிடையாது. சன் டி.வி.குழுவினர் நாங்கள் இல்லாத நேரத்தில் போலீசார் உதவியுடன் வீட்டுக்குள் நுழைந்து அட்டகாசம்செய்துள்ளனர்.

போலீசாரே அவ்வாறு வீடியோ படத்தை எடுத்திருந்தாலும் அதை நீதிமன்றத்தில்தானே ஒப்படைக்கவேண்டும். பத்திரிக்கை நிருபர்களும், டி.வி. சேனல்களுக்கும் அந்தக் கேசட் எப்படிப் போனது?எங்கள் வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப்பிங்குகளையே சன் டி.வி. தொடர்ந்து ஒளிபரப்பிவந்தது.

ஹைதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்டம் குறித்து ஆந்திர அதிகாரிகள் பொய்யானசாட்சியங்களைக் கூறியுள்ளனர். அவர்கள் கூறும் திராட்சை இனங்கள் அங்கு பயிரிடப்படவேஇல்லை. அங்கு தாம்ஸன், பிளாக் பியூட்டி உள்ளிட்ட மூன்று வகையான திராட்சைகள்தான்பயிரிடப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பும் தவறாகக் காட்டப்பட்டுள்ளது.

என் கணவர் நடராஜனுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தமே இல்லை. அவரைப் பற்றி முழுமையாகவிசாரிக்காமல் தகவல்கள் தரப்பட்டுள்ளன. நாங்கள் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்எங்கள் கிராமத்தில் எங்களுக்கென நிறைய நிலங்கள் உள்ளன. ஆனால் வேண்டுமென்றே அவைகணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

சுதாகரன் திருமணத்தின் செலவு குறித்து மிகைப்படுத்திக் கூறியுள்ளனர். இது தொடர்பான அறிக்கைநகைச்சுவையாகவும் உள்ளது. அரசியல் காரணங்களுக்காக கற்பனையை மிகைப்படுத்தி இப்படிஒரு அறிக்கையைத் தயார் செய்துள்ளனர். திருமணச் செலவில் பெரும்பகுதி பெண் விட்டார்தான்செய்துள்ளனர்.

அதேபோல் சுதாகரனின் திருமண நிகழ்ச்சியின்போது ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சிநடத்தப்பட்டது உண்மைதான். அதற்காக அவருக்கு நாங்கள் பரிசுப் பொருட்கள் எதையும்தரவில்லை என்றார் சசிகலா.

கடைசியாக "வழக்கு பற்றி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?" என்று நீதிபதி ராஜமாணிக்கம்கேட்டார். அதற்கு சசிகலா பதிலளிக்கையில்,

கருணாநிதி அரசியல் சதி செய்து வேண்டுமென்றே இப்படி ஒரு வழக்கை என் மீதும், என் சகோதரிமீதும் தொடருமாறு தூண்டி விட்டுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் என் குடும்பத்தினருக்கும், என் சகோதரிக்கும், அதிமுகவுக்கும் அவப் பெயர்ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தன் மகன் ஸ்டாலினை அரசியல் ரீதியாக முன்னுக்குக்கொண்டுவர வேண்டும் என்பதற்காகவும்தான் கருணாநிதி தன் அதிகார பலத்தை தவறாகப்பயன்படுத்தி வழக்கு தொடரச் செய்துள்ளார்.

ஜனதாக் கட்சித் தலைவரான சுப்பிரமணியம் சுவாமியும் கருணாநிதியுடன் கூட்டு சேர்ந்து சதி செய்துஇவ்வழக்கை ஜோடித்துள்ளார். அவர் அமெரிக்காவில் படித்ததாகச் சொல்வதற்கும், இந்தச்செயலுக்கும் சம்பந்தமே இல்லை.

ஏராளமான போலீசாரை இவ்வழக்கில் ஈடுபடுத்தி, விசாரணை என்ற பெயரில் சாட்சிகளை மிரட்டி,என் உறவினர்களைத் துன்புறுத்தி, அதிகாரிகளைப் பயமுறுத்தி ஆவணங்களை அழித்தும்,திருத்தியும், மறைத்தும் அராஜக முறையில் எங்கள் மேல் பழி சுமத்தியுள்ளனர்.

இந்த விசாரணையை நடத்தி வந்த போலீஸ் அதிகாரி நல்லம்மநாயுடுவுக்கு தேவையே இல்லாமல்பணி நீட்டிப்பும், மறு வேலைவாய்ப்பும் திமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டுள்ளன என்றார்சசிகலா.

இவ்வழக்கு தொடர்பாக இரண்டு நாட்களாக தனி நீதிமன்றத்தில் ஆஜரானபோதும், சசிகலாவும்சுதாகரனும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X