For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை- திமுக மனு மீது நடவடிக்கை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ.66.65 கோடி மதிப்புக்கு சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா,அவருடைய தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீது கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சென்னை தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை தற்போது மிகவும் விறுப்பாக நடந்துவருகிறது.

இந்நிலையில் தற்போதும் அதிமுக அரசே தமிழகத்தில் நடப்பதால், இவ்வழக்கின் விசாரணையைவேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி கடந்த மாதம் திமுக பொதுச் செயலாளரானஅன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மேலும் இந்த மாதத் துவக்கத்தில் இது தொடர்பாக திமுக சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பானவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

விறுவிறுப்படைந்துள்ள விசாரணை:

முன்னதாக கடந்த ஒரு மாதமாக இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை தனி நீதிமன்றத்தில்மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இவ்வழக்கில் மொத்தம் 259 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். கடைசி அரசுத் தரப்பு சாட்சியானபோலீஸ் அதிகாரி நல்லம்மநாயுடு கடந்த இரண்டு வாரங்களாக சாட்சியம் அளித்து வந்தார்.வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் கடந்த 25 மற்றும்26ம் தேதிகளில் சாட்சியம் அளித்தனர்.

நேற்று ஜெயலலிதாவின் வழக்கறிஞரும், நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமாரும்சாட்சியம் அளித்தனர்.

இந்நிலையில் நேற்றே வக்கீல்களின் வாதங்களும் தொடங்கின. ஜெயலலிதா, சசிகலா மற்றும்இளவரசி ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல் ஜோதி வாதாடுகையில்,

ஜெயலலிதாவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் சாட்டப்பட்டுள்ள முறை பாதிப்பை ஏற்படுத்துவதாகஉள்ளது. கடந்த 1991ம் ஆண்டு ஜூலை 1ம் தேதியிலிருந்து 1996 ஏப்ரல் 30ம் தேதி வரைசென்னையிலும் மற்ற இடங்களிலும் சொத்துக்கள் சேர்த்ததாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்த மற்ற இடங்கள் எவை என்று குறிப்பிடப்படவில்லை. மற்ற இடங்கள் என்றால் ஒட்டுமொத்தமாக இந்த உலகத்தையேதான் குறிக்கும்.

வழக்கு சம்பந்தப்பட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட 32 நிறுவனங்கள் மூலம் சொத்துக்கள்சேர்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கால கட்டத்தில் ஜெயலலிதா எந்தநிறுவனத்தையும் தொடங்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டு தவறானது.

அதேபோல் சம்பந்தப்பட்ட காலத்தில் 31ஏ போயஸ் தோட்ட கட்டடத்தைத் தவிர வேறு எந்தசொத்தையும் ஜெயலலிதா வாங்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களுடன் ஜெயலலிதா குற்றச் சதியில் ஈடுபட்டிருந்தார் என்பதற்குஅரசுத் தரப்பில் எந்த சாட்சியும் கொண்டுவரப்படவில்லை. எப்படி சதி நடந்தது என்பதும்குறிப்பிடப்படவில்லை.

குற்றச்சாட்டில் ஜெயலலிதாவுடன் சசிகலா வசித்து வந்தார் என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியஅரசியல் சாசனச் சட்டத்தின்படி ஒருவருடைய அடிப்படை உரிமையையே பறிக்கும் செயலாகும்.ஒரு நபர் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிப்பதற்கு உரிமை உள்ளது. இதற்கு இந்திய அரசியல்சட்டம் 19வது பிரிவு வழி வகுக்கிறது.

ஒரே இடத்தில் வசித்ததால் அங்கு சதிக்கான விதை தூவப்பட்டது என்று கூறிவிட முடியாது.

மேலும் "கணிசமாக" என்று குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, யார் யாருக்கு எவ்வளவு பணம் சேர்ந்ததுஎன்பதைக் கூறவே இல்லை. ஒட்டுமொத்தமாக இந்த வழக்கு கற்பனையாகவேதொடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் இருட்டு அறையில் குருட்டுமனிதன் கறுப்புப் பூனைத் தேடுவது போல் உள்ளது என்றார் ஜோதி.

வக்கீல்களின் விவாதங்கள் இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான்இவ்வழக்கின் மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X